‘எனக்கு யாரும் மரியாதை அளிப்பதில்லை’ - முலாயம் சிங் யாதவ் வருத்தம்Sponsored‘இப்போது யாரும் எனக்கு மரியாதை தருவதில்லை’என உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம்  சிங் யாதவ் வருத்தம் தெரிவித்துள்ளார்.  

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான பகவதி சிங்கின் பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ்,“தனக்கு யாரும் இப்போது மரியாதை அளிப்பதில்லை. ஒரு வேளை நான் இறந்த பிறகு நடக்கலாம். ஒருவர் உயிரிழந்த பின்னர் மரியாதை அளிப்பது தான் நம் நாட்டினர் வழக்கம் என லோஹியா சொன்னது என் நினைவுக்கு வருகிறது. இளம் தலைவர்கள் எப்படி எளிமையாக நடந்துகொள்வது என்பதை மூத்த தலைவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Sponsored


தற்போது சமாஜ்வாதி கட்சியின் தலைவராக இருக்கும் அகிலேஷ் யாதவின் தந்தை முலாயம் சிங் யாதவ். கடந்த தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும் முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவின் தந்தையுமான முலாயம் சிங்குக்கும், அகிலேஷுக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த உட்கட்சி பிரச்னையால் கட்சி இரண்டாக பிளவுபட்டது. ஆட்சி மற்றும் கட்சியின் தலைவராக அகிலேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால், அகிலேஷ் தலைமையில்தான், சமாஜ்வாதி தேர்தலை சந்தித்தது. முலாயம் சிங் இந்த தேர்தலில் இருந்து விலகியே நின்றார்.

Sponsored
Trending Articles

Sponsored