`தமிழ் மொழியால் தேசம் பெருமை கொள்கிறது' - மான் கி பாத் நிகழ்ச்சியில் நெகிழ்ந்த மோடி!Sponsoredஇயற்கை சீற்றங்கள் பேரழிவை ஏற்படுத்தினாலும், நாம் ஒற்றுமையாக இருக்க அந்த நிகழ்வுகள் நமக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இன்று மான் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது, ``உலகிலேயே மிகத் தொன்மையான மொழி தமிழ். உலக மக்களால் பழைமையான மொழியாகத் தமிழ் அறியப்படுவதில் இந்தியா பெருமை கொள்கிறது. அதேபோல் சம்ஸ்கிருதம் இந்தியாவின் உயர்ந்த மொழி. அது நமது கலாசாரத்துடன் இணைந்துள்ளது. சம்ஸ்கிருத வாரத்தை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துகள். இதேபோல் ஆசிரியர் தினம் கொண்டாடப்படவுள்ளது. அவர்களுக்கும் எனது வாழ்த்துகள். பெற்றோருக்குப் பின் நம்மைப் புரிந்துகொள்பவர்கள் ஆசிரியர்களே. கேரளாவில் பெருமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தத் துயரமான தருணத்தில், அவர்களுக்காக நாம் அனைவரும் உள்ளோம்.

Sponsored


கடவுளின் தேசத்துக்கு 125 கோடி மக்களும் உதவி புரிந்து வருகிறோம். இயற்கை சீற்றங்கள் பேரழிவை ஏற்படுத்தினாலும், நாம் ஒற்றுமையாக இருக்க இந்த நிகழ்வுகள் நமக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது. நல்ல, திறமையான நிர்வாகத்தை அறிமுகப்படுத்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாயை என்றும் நாடு நினைவில் வைத்துக்கொள்ளும். அவர் சிறந்த தேச பக்தர் மட்டுமன்றி, நாட்டுக்கு உண்மையான பங்களிப்பை அளித்தவர்.

Sponsored


சமீபத்தில் முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் உண்மையில் ஆக்கபூர்வமாக அமைந்தது. பெண்களுக்கு எதிராக அநீதி இழைப்பவர்களுக்கு எதிரான சட்டத்திருத்தம், முத்தலாக் சட்டத்திருத்தம் லோக் சபாவில் நிறைவேற்றப்பட்டது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாதனைப் படைத்து வரும் வீரர்களுக்கு வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்படுவதை அடுத்து பிரதமர் மோடிக்கு சிறுமியர்கள், பெண்கள் ராக்கி கட்டி மகிழ்ந்தனர்.Trending Articles

Sponsored