அமித் ஷா-வின் பாதுகாப்புச் செலவு: ஆர்.டி.ஐ கேள்விக்குத் தகவல் ஆணையம் பதில்!Sponsoredபா.ஜ.க தேசியத் தலைவரும் மாநிலங்களைவை உறுப்பினருமான அமித் ஷா-வின் பாதுகாப்புச் செலவு தொடர்பாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டம்மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய தகவல் ஆணையம் தகவல் அளிக்க மறுத்துவிட்டது. 

பா.ஜ.க தலைவர் அமித் ஷா-வின் பாதுகாப்பு தொடர்பாக, தீபக் ஜுனேஜா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம்மூலம் கேள்வி எழுப்பி யிருந்தார். அவர் ,  2014 -ம் ஆண்டு ஜூலை 5 -ம் தேதி, இது தொடர்பான கேள்விகளை அளித்திருந்தார். அப்போது, அமித் ஷா மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்தெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் இது தொடர்பாக பதிலளித்துள்ள மத்தியத் தகவல் ஆணையம், 'தனி நபர் பாதுகாப்பு தொடர்பான எந்தத் தகவலையும் வெளியிட முடியாது' என உள்துறை அமைச்சகம் தெரிவித்ததாகக்  கூறியுள்ளது. இதுபோன்ற தகவல்கள், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Sponsored


இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தீபக் ஜுனேஜா, “அவர் பா.ஜ.க தேசியத் தலைவராக மட்டும் இருக்கும்போதே மத்திய உள்துறை அமைச்சகத்தால் அவருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இது மக்களின் பணம் என்பதால், இதுதொடர்பான தகவல்களைத் தெரிந்துகொள்ள மக்களுக்கு முழு அதிகாரம் உள்ளது” என்றார். 

Sponsored
Trending Articles

Sponsored