கேரளாவில் 34,732 கி.மீட்டர் சாலைகள், 218 பாலங்கள் சேதம்! சீரமைக்க ஒன்றரை ஆண்டுகள் ஆகும்Sponsored'கேரள மாநிலத்தில், மழை காரணமாக அதிக அளவில் பொதுப்பணித் துறையின் சொத்துகள் சேதம் அடைந்துள்ளன. சாலைகள், பாலங்களைச் சீரமைக்க ஒன்றரை ஆண்டுகள் ஆகும்' என்று கூறப்படுகிறது.

கேரள மாநிலத்தில், கடந்த 9-ம் தேதி முதல் இரண்டு வாரங்கள் தொடர்ந்து பெய்த மழையால், பெரும்பாலான சாலைகள் மிக மோசமாகச் சேதமடைந்துள்ளன. இவற்றைச் சரிசெய்வதற்கான மதிப்பீடு தயாரிக்கப்பட்டுவருகிறது. மழை காரணமாக முற்றிலும் துண்டிக்கப்பட்ட சாலைகள், உடைந்த பாலங்கள், நிலச்சரிவு காரணமாக உடைந்த சாலைகள் ஆகியவற்றை உடனடியாகச் சீரமைக்க கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக 5815.25 கோடி ரூபாய் செலவு ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் முக்கிய சாலைகளைச் சீரமைக்க அரசு முதற்கட்டமாக 1000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

Sponsored


Sponsored


தேசிய நெடுஞ்சாலைகளைச் சீரமைக்க 533.78 கோடி ரூபாயும், உடைந்த பாலங்களைச் சீரமைக்க 293.3 கோடி ரூபாயும், சேதமான அரசு கட்டடங்களைச் சீரமைக்க 10.09 கோடி ரூபாயும் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது. கேரள மாநிலம் முழுவதும் மொத்த 34,732 கிலோமீட்டர் சாலைகள் சேதமடைந்துள்ளன. 218 பாலங்கள் சேதமடைந்துள்ளன. கோட்டயம், பத்தணம்திட்டா, இடுக்கி, திருச்சூர் ஆகிய மாவட்டங்களில்தான் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நிலச்சரிவு காரணமாக 25 இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களில், சாலையில் குவிந்துகிடக்கும் பாறாங்கற்கள் மற்றும் மண்ணை அகற்ற 18 கோடி ரூபாய் தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.Trending Articles

Sponsored