``பா.ஜ.க-வுக்காகத் தேர்தல் பிரசாரம் செய்கிறேன், பதவி தாருங்கள்'' - டி.ஜி.பி கடிதத்தால் சர்ச்சை!Sponsoredத்தரப்பிரதேச மாநில ஊர்க்காவல் படை டி.ஜி.பி., சூர்யகுமார் சுக்லா, பா.ஜ.க-வுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்ய விருப்பம் தெரிவித்து, அம்மாநில முதல்வரிடம் விண்ணப்பம் வழங்கியுள்ளார்.

உத்தரப்பிரதேச ஊர்க்காவல்படை டி. ஜி.பி., சூர்ய குமார் சுக்லா. இவர், ஆகஸ்ட் மாதத்தோடு பணி நிறைவுபெறுகிறார். இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் கடிதம் ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்தக் கடிதத்தில், ``இந்த மாதத்தோடு நான் பணி நிறைவுபெறுகிறேன். நான், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றியுள்ளேன். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க-வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய விரும்புகிறேன். உங்களின் தற்போதைய முயற்சிகளை மேலும் பலப்படுத்துவதற்காக நான் தீவிரமாக இயங்குவேன். அதற்குப் பதிலாக, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் அல்லது மாநில திட்டக்குழு துணைத் தலைவர் போன்ற ஏதேனும் ஒரு பதவிகளில் என்னை நியமிக்க வேண்டும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Sponsored


Sponsored


கடந்த பிப்ரவரி மாதம், லக்னோ பல்கலைக்கழக நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட டி.ஜி.பி., சூர்யகுமார் சுக்லா, ``அயோத்தியில் ராமர் கோயிலை விரைவில் கட்ட வேண்டும்" என உறுதிமொழி ஏற்றிருந்தார். ஊர்க்காவல் படை டி.ஜி.பி, இப்படி உறுதிமொழி செய்துள்ளார் என அப்போது  சர்ச்சையானது. இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் செய்கிறேன்; அதற்குப் பதிலாக பதவி தரவேண்டும் என முதல்வருக்கு கடிதம் எழுதியிருப்பது பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.Trending Articles

Sponsored