`பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா' தடையை ரத்துசெய்தது ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம்!Sponsoredஜார்க்கண்ட் மாநிலத்தில், 'பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா' அமைப்புக்கு எதிரான தடையை நீக்கி உத்தரவிட்டது, அம்மாநில உயர் நீதிமன்றம்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில், 'பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா' என்ற அமைப்புக்கு ஆளும் பா.ஜ.க அரசு '1908ல் கிரிமினல் சட்ட திருத்தம் 16-வது பிரிவின்படி' கடந்த பிப்ரவரி மாதம் தடைவிதித்தது. இந்தத் தடையை எதிர்த்து 'பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா' அமைப்பு சார்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த விசாரணை, நேற்று (27-08-2018) ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள  உயர் நீதிமன்றத்துக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்தத் தடையை நீக்க உத்தரவிட்டதுடன், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மீது பதியப்பட்டிருந்த முதல் தகவல் அறிக்கையையும் (FIR) ரத்துசெய்து தீர்ப்பு வழங்கியது.

Sponsored


Sponsored


இந்த இயக்கத்தைத் தடைசெய்வதற்கான நடைமுறைகளில், மேற்குறிப்பிட்ட சட்டத்தின்படி எந்த விதிகளையும் மாநில அரசு கடைப்பிடிக்கவில்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், தடையை நியாப்படுத்தும் எந்தவொரு ஆவணங்களையும் ஜார்க்கண்ட் அரசால் ஆஜர்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஜார்க்கண்ட் மாநில உயர் நீதிமன்ற உத்தரவால், 'பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா' அமைப்பினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.Trending Articles

Sponsored