இந்தியாவில் ட்ரோன்கள் பறக்க தடை நீங்கியது... டிசம்பர் 1-ம் தேதி முதல் புதிய கொள்கை!Sponsoredந்தியாவின் புதிய ட்ரோன் கொள்கை (ஆளில்லாத விமானம் பயன்பாட்டுக் கொள்கை ) வெளியிடப்பட்டுள்ளது.  டிசம்பர் 1- ம் தேதி முதல் புதிய ட்ரோன் கொள்கை அமலுக்கு வருகிறது.  எங்கே ட்ரோன்கள் பயன்படுத்தலாம், எங்கே பயன்படுத்தக் கூடாது என்பதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்து  இயக்குநரகம் அறிவித்துள்ளது.  ட்ரோன்கள் 5 வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 250 கிராம் எடைக்குட்பட்டது நானோ ரகம்.  2 கிலோ எடைக்குள் இருப்பது மைக்ரோ, 2 முதல் 25 கிலோ எடைக்குட்பட்டது சிறிய ரகம். 25 முதல் 150 கிலோ எடைக்குட்பட்டது மத்திய ரகம், 150 கிலோ எடைக்கு மேற்பட்டது பெரிய ரகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நானோ ரகத்தைத் தவிர மற்ற அனைத்து ட்ரோன்களை வாங்க கண்டிப்பாக மத்திய ட்ரோன்  இயக்குநரகத்திடம் அனுமதி பெற  வேண்டும். அதேபோல, நானோ ரகத்தைத் தவிர மற்றவற்றைப் பறக்க விட கண்டிப்பாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறையிடம் அனுமதி வாங்க வேண்டும். உள்ளூர் காவல் துறையினரிடம் 24 மணி நேரத்துக்கு முன்னதாகத் தகவல் அளிக்க வேண்டும். நானோ மற்றும் தேசிய தொழில்நுட்ப ஆய்வு மைய ட்ரோன்களைத் தவிர, மற்றவற்றுக்குத் தனி அடையாள எண்  (UIN) வழங்கப்படும். 

Sponsored


ஆப்பரேட்டர்கள் Unmanned Aircraft Operator Permit எனப்படும் உரிமம் பெற்றிருக்க வேண்டும். பகலில் மட்டுமே ட்ரோன்கள் இயக்கப்பட வேண்டும். 400 மீட்டர் உயரத்துக்கு மேல் பறக்கக் கூடாது. விமான நிலையங்கள், ராணுவ முகாம்கள், சர்வதேச எல்லைப் பகுதி, கடற்கரைப் பகுதிகளில்  பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Sponsored


மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பாபு, ''மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு, ட்ரோன் வர்த்தகத்தை ஊக்குவிக்கும். இந்தியாவில் ட்ரோன் வர்த்தகத்தின் சந்தை மதிப்பு, 1 ட்ரில்லியன் டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது '' என்று தெரிவித்துள்ளார். இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா '' ஆட்டோ ரிக்ஷாவில் போய்க்கொண்டிருந்த காலம் மாறி,  ஏர் ரிக்ஷாவில் செல்லுமளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. பேரிடர் காலங்களில் ட்ரோன்கள் உதவிகரமாக உள்ளன. கண்காணிப்பு, பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் விவசாயத் துறையிலும் இவற்றின் பங்களிப்பு அதிகரித்துள்ளது'' என்று கூறியுள்ளார்.  

250 கிராம் எடை கொண்ட, 50 அடி உயரத்தில் பறக்கும் நானோ ரகங்களுக்கு எந்த அனுமதியும் வாங்கத் தேவையில்லை. 200 அடி உயரத்தில் பறக்கும் மைக்ரோ  450 அடி உயரத்தில் பறக்கும் சிறிய ரக ட்ரோன்களுக்குக் கண்டிப்பாக உள்ளுர் போலீஸ் அனுமதி தேவை. ட்ரோன்களைப் பதிவுசெய்யவும், பறப்பதற்கு அனுமதி வாங்கவும்  தனி ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. சொந்தக்காரர்கள்  தங்களைப் பதிவு செய்துகொண்டால் போதுமானது.  ட்ரோனை இயக்குபவர்கள்,  ஒவ்வொரு முறையும் பறக்கும் முன் அனுமதி பெற வேண்டும். தற்போதைய கொள்கையில், ட்ரோன்கள் வழியாக உணவுப் பொருள்கள் டெலிவரி செய்ய அனுமதியில்லை. இரண்டாவது கொள்கையில், உணவுப் பொருள்கள் சப்ளை செய்ய அனுமதி அளிக்கப்படலாம். Trending Articles

Sponsored