`அவ்வளவு எளிதான காரியம் அல்ல... ஒன்றுபட வேண்டும்!' - கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சுSponsoredவரலாறு காணாத அளவில் பெய்த கனமழை காரணமாக பலத்த சேதம் கண்டுள்ள கேரளாவை மீண்டும் சீரமைப்பது எளிதான காரியம் அல்ல என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

கேரளாவில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கிய மழை தீவிரம் அடைந்ததால், 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளை இழந்துள்ளனர். இன்னும் பலஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த கேரள முதல்வர், `வெள்ள பாதிப்பினால் ஏற்படும் சேதம் குறித்து ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட அளவைக்காட்டிலும் மிகுந்த அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதனால், கேரளாவை மறுசீரமைப்பது மிகவும் கடினம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து கேரளாவைத் திரும்பவும் மறுசீரமைக்க வேண்டும். முதற்கட்ட மீட்புப் பணிகள் முடிந்து விட்டன. தற்போது  மறுகட்டமைப்புப் பணிகளுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரளாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் தங்களது ஒரு மாதச் சம்பளத்தை நிவாரண நிதியாக அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், வசதி படைத்தவர்களும் நிவாரணப் பணிகளில் உதவி செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளேன். 

Sponsored


முகாமிலிருந்து வீடு திரும்பிய மக்கள், வீட்டை விட்டுச் சென்றபோது பார்த்த மாநிலத்தை தற்போது கண்டிருக்க மாட்டார்கள். அனைத்தையும் மக்கள் இழந்து விட்டனர். அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் மேற்பார்வையில் மக்களுக்காக வழங்கப்படும் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. முகாமிலிருந்து வீடு திரும்பியவர்களுக்கு முதற்கட்டமாக ரூ.10,000 வழங்கப்படும்' என்றார்.

Sponsored
Trending Articles

Sponsored