வர்த்தக யுத்தம் குறித்த கவலை சற்று தணிந்த நிலையில், சந்தை மேலும் உயர்ந்தது Sponsoredதொடர்ந்து இரண்டாம் நாளாக இந்திய பங்குச் சந்தையில் காளையர் ஆட்சி செம்மையாக அமைந்ததால், சந்தைகளின் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸும் நிஃப்டியும் இன்று மீண்டும் புதிய உச்சங்களைத் தொட்டன.

மும்பை சந்தையின் சென்செக்ஸ் 38,938.91 என்ற உயரத்தைத் தொட்டு பின்னர் 38,896.63 என்று 202.52 புள்ளிகள் அதாவது 0.52 சதவிகித லாபத்துடன் இன்று நிறைவுற்றது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி11,760.20 என்று உயர்ந்து, பின்னர் 46.55 புள்ளிகள் அதாவது 0.4 சதவிகிதம் லாபத்துடன் 11,738.50-ல் முடிந்தது.

Sponsored


Sponsored


அமெரிக்காவும் மெக்ஸிகோவும் வட அமெரிக்க பிரீ ட்ரேட் ஒப்பந்தத்தை பரிசீலனை செய்து புதுப்பித்துக்கொள்ள முடிவு செய்திருப்பது நேற்றைய அமெரிக்க சந்தையில் ஒரு உயர்வுக்கு வித்திட்டதைத் தொடர்ந்து இன்று ஆசிய பங்குச் சந்தைகளின் முன்னேற்றத்துக்கும் காரணமானது.

இதே காரணத்தால் ஐரோப்பிய சந்தைகளும் இன்று பலம் வாய்ந்திருந்தன. தற்போது கனடாவும் இதுபோலவே அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை மாற்றி அமைத்துக்கொள்ள முடிவு செய்யும் என்ற நம்பிக்கையும் சந்தைகளில் நிலவிய உற்சாகத்துக்கு காரணம்.
இந்திய சந்தையைப் பொறுத்தவரையில், சர்வதேச சந்தைகளின் தெம்பான நிலை மட்டுமின்றி, பொருளாதார வளர்ச்சி மற்றும் நிறுவனங்களின் வருங்கால செயல்பாடு பற்றிய நம்பிக்கை, டாலருக்கெதிராக ரூபாயின் சிறிய முன்னேற்றம், மற்றும் அந்நிய முதலீட்டாளர்களின் தொடர்ந்த முதலீடு ஆகியவை பங்குகளின் உயர்வுக்கு வழி வகுத்திருக்கின்றன.

இன்று விலை அதிகரித்த பங்குகள் :

ஹிண்டால்கோ 3.6%

அதானி போர்ட்ஸ் 2.2%

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2.1%

வேதாந்தா 2.2%

மாருதி சுசூகி 1.75%

ஆக்ஸிஸ் பேங்க் 1.7%

அதானி டிரான்ஸ்மிஷன் 15.7%

ரெடிங்க்டன் இந்தியா 9.8%

ஜே குமார் இன்ஃப்ரா 9.5%

பைசர் 9.1%

சுவேன் லைஃப் சயின்சஸ் 6.8%

சம்பல் ஃபெர்டிலைசர்ஸ் 6.3%

விலை சரிந்த பங்குகள் :

கெயில் இந்தியா 5.4%

யெஸ் பேங்க் 3%

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் 1.9%

சிப்லா 1.6%

பி.சி. ஜிவெல்லர்ஸ் 5%

இன்று மும்பை பங்குச் சந்தையில் 1158 பங்குகள் லாபத்துடன் முடிந்தன. 1508 பங்குகள் விலை சரிந்தும், 177 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.Trending Articles

Sponsored