நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் - விரைவில் மசோதா தாக்கல்!Sponsoredநாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தும் முடிவை மத்திய அரசு தீவிரப்படுத்திவருகிறது. அதன்படி, விரைவில் அரசியல் சாசனத்தில் சட்டதிருத்தம் மேற்கொள்ள பா.ஜ.க  முடிவுசெய்துள்ளதாக, அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் கிருஷ்ண சாகர் ராவ் தெரிவித்துள்ளார்.


ஹைதராபாத்தில், தெலங்கானா மாநில பாரதீய ஜனதா கட்சியின் செய்தித்தொடர்பாளர் கிருஷ்ணசாகர் ராவ் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது, `நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்தும் முடிவை பா.ஜ.க கைவிடவில்லை. விரைவில் இதற்கான மசோதா தாக்கல்செய்யப்படும். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலோ அல்லது சிறப்புக் கூட்டத்தை கூட்டியோ இந்த மசோதா தாக்கல்செய்யப்படும். மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், மிசோரம் மாநிலங்களுடன் சட்டசபைத் தேர்தலை நடத்திவிடலாம் என எண்ணி, முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சட்டசபையைக் கலைத்தாலும்கூட, தொழில்நுட்ப ரீதியில் அது சாத்தியம் கிடையாது. ஏனென்றால், இந்த 4 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் ஏற்பாடுகளைத் தேர்தல் கமிஷன் ஏற்கெனவே செய்து முடித்துவிட்டது. அத்துடன், இன்னொரு மாநிலத்துக்கு சட்டசபைத் தேர்தல் நடத்தும் நிலையில் தேர்தல் கமிஷன் இல்லை'' என்று தெரிவித்தார். 
 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored