இன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் -  29-08-2018உலகச் சந்தைகள்

அமெரிக்க சந்தைக் குறியீடுகளான எஸ்&பி500 இண்டெக்ஸ் 2897.52(+0.78) என்ற அளவிலும், டவ்ஜோன்ஸ் இண்டெக்ஸ் 26,064.02 (+14.38) என்ற அளவிலும் 28-08-18 அன்று நடந்த டிரேடிங்கின் இறுதியில் முடிவடைந்தது. இன்று காலை இந்திய நேரம் 04.50 மணி நிலவரப்படி,  உலகச் சந்தைகளில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1,201.80 டாலர் என்ற விலையிலும், ப்ரென்ட் குரூடாயில் (அக்டோபர் 2018) பீப்பாய் ஒன்றுக்கு 75.95 டாலர்  என்ற அளவிலும் இருந்தது.

Sponsored


Sponsored


டாலரின் மதிப்பு ரூபாயில்

Sponsored


28-08-18 அன்று,  அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ. 70.1687 என்ற அளவில் இருந்தது.

நிஃப்டி மற்றும் ஏனைய இண்டெக்ஸ்களின் சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டென்ஸ் லெவல்கள்

28-08-18 அன்று, நிஃப்டி சிறியதொரு ஏற்றத்துடன் முடிவடைந்திருந்தது. ஆகஸ்ட் மாத எஃப்&ஓ எக்ஸ்பைரிக்குண்டான மூவ்மென்ன்டுகளே சந்தையில் நடக்குமென்று எதிர்பார்க்கலாம். அதனால், டெக்னிக்கல் லெவல்கள் அடிக்கடி வொர்க் அவுட் ஆகாமல் போய்விடும். புதிய டிரேடர்களும், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களும் வியாபாரம் செய்வதை இன்றைக்கு முழுமையாகத் தவிர்ப்பது நல்லது. அதிக அளவிலான ரிஸ்க் எடுக்கக்கூடிய டிரேடர்களும்கூட, அவர்கள் செய்யும் வியாபாரத்தின் அளவை மிகமிகக் குறைவாகவும், மிகவும் ஸ்ட்ரிக்ட்டானதொரு ஸ்டாப்லாஸுடனும் வியாபாரம் செய்யலாம். ஷார்ட் சைட் மற்றும் ஓவர்நைட் பொசிஷன்களை இன்றைக்கு முழுமையாகத் தவிர்ப்பது நல்லது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) என்ன செய்தார்கள்?

28-08-18 அன்று நடந்த எஃப்ஐஐ/எஃப்பிஐ டிரேடிங் நடவடிக்கை  என்று பார்த்தால், 4,082.28 கோடி ரூபாய்க்கு வாங்கியும் 4,243.33 கோடி ரூபாய்  அளவுக்கு விற்றும், நிகர அளவாக 161.05 கோடி ரூபாய்க்கு விற்றிருந்தனர்.

உள்நாட்டு இன்ஸ்ட்டிட்யூஷன்ல் முதலீட்டாளர்கள் (டிஐஐ) என்ன செய்தார்கள்?

28-08-18 அன்று நடந்த டிஐஐ டிரேடிங் நடவடிக்கை என்று பார்த்தால், 2,962.38 கோடி ரூபாய்க்கு வாங்கியும் 3,161.66 கோடி ரூபாய்க்கு விற்றும் ,நிகர அளவாக 199.28 கோடி ரூபாய்க்கு விற்றிருந்தனர். 

டெலிவரி அதிகமாக நடந்திருப்பதால் சற்று கவனிக்கலாமே!

குறிப்பிட்ட சில பங்குகளில், 28-08-18 அன்று நடந்த டெலிவரிக்கான வியாபார விவரம் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்) மற்றும் கடந்த ஐந்து நாள்களில் வெறும் எண்ணிக்கையின் அடிப்படையிலும் (5 நாள் எண்ணிக்கை) மற்றும் 10 நாள்களில் மூவிங் ஆவரேஜ் அடிப்படையில் (10 நாள் மூவிங் ஆவரேஜ் -DMA) டெலிவரியின் வால்யூம் அதிகரித்த விவரம்:.


எஃப்&ஓ வியாபாரத்தில், 95 சதவிகித சந்தையில் அதிகப்படியான பொசிஷன் லிமிட்டுகளை எட்டிய காரணத்தால் புதிய வியாபாரத்துக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள பங்குகள்:
DHFL, IDBI, JISLJALEQS, PNB.

28-08-18 அன்று நடந்த  டிரேடிங்கில், ஆகஸ்ட் மாத எக்ஸ்பைரிக்குண்டான ப்யூச்சர்ஸ்  ஓப்பன் இன்ட்ரெஸ்ட் மற்றும் விலை அதிகரித்த ஒரு சில குறிப்பிட்ட பங்குகள் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்):

குறிப்பிடத்தக்க பங்குகள் எதுவும் இல்லை.

28-08-18 அன்று நடந்த  டிரேடிங்கில், ஆகஸ்ட் மாத எக்ஸ்பைரிக்குண்டான ப்யூச்சர்ஸ்  ஓப்பன் இன்ட்ரெஸ்ட் மற்றும் விலை  குறைந்த ஒரு சில குறிப்பிட்ட பங்குகள் (நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச்):

ONGC ITC, PNB, SBIN, BANKBARODA, TATAPOWER, RECLTD, PFC, BHARTIARTL, CGPOWER, YESBANK, IOC, SUNPHARMA, BHEL, UNIONBANK, POWERGRID, NCC, HINDPETRO, BEL, TECHM, UPL.

இன்றைய போர்டு மீட்டிங்குகள் 

இன்று  போர்டு மீட்டிங்  நடத்த உள்ள நிறுவனங்கள் (என்எஸ்சி சிம்பல்கள்)
AMTEKAUTO, ANANTRAJ, BARTRONICS, ELECTROSL, HATHWAY, KHAITANELE, NTL, PFS, NHARCORP, PRAENG, SUJANAUNI, SMPL, UNITECH, UCALFUEL.
*****
பொறுப்பு கைதுறப்பு: இந்தப் பகுதி ஒரு செய்தித் தொகுப்பேயாகும். இந்தப் பகுதியில் தரப்பட்டுள்ள விவரங்கள், டேட்டாக்கள், தகவல்கள் போன்றவற்றுக்கு விகடன்.காம் இணையதளம் எந்தவித உத்தரவாதமும் வழங்கவில்லை. இந்த இணையதளப் பக்கத்தில் தரப்பட்டுள்ள விவரங்கள், முதலீட்டு அறிவுரைகளோ/ஆலோசனைகளோ அல்ல. பிழைகள், தவறுகள் மற்றும் தொகுப்பில் இருக்கும் வேறு எந்தவிதமான தவறுகள்/ குறைகளுக்கு விகடன் நிர்வாகமோ அதன் அலுவலர்களோ/தொகுப்பாளர்களோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  மேலும், இதனால் ஏற்படக்கூடிய எந்தவிதமான நேரடி/மறைமுக பணரீதியான மற்றும் ஏனைய நஷ்டங்களுக்கும் விகடன் நிர்வாகம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. இணையதளத்தின் இந்தப் பகுதியைப் படிக்கும் வாசகர்கள் அனைவரும் https://www.vikatan.com/news/miscellaneous/113898-disclaimer-disclosures.html  எனும் இணையதளப் பக்கத்தில் தரப்பட்டுள்ள பொறுப்பு கைதுறப்புதனை முழுமையாகப் படித்து, தெளிவாகப் புரிந்துகொண்ட பின்னரே செயல்படுகின்றனர் என்ற உறுதி மற்றும் உத்தரவாதம்தனை விகடன் நிறுவனத்துக்கு அளிக்கின்றனர். (டாக்டர் எஸ் கார்த்திகேயன் ஒரு செபி பதிவுபெற்ற ரிசர்ச் அனலிஸ்ட் – செபி பதிவுஎண்:  INH200001384)
 Trending Articles

Sponsored