ஜூனியர் என்.டி.ஆரின் தந்தை ஹரிகிருஷ்ணா விபத்தில் பலி!Sponsoredநடிகரும் முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி ராமா ராவ் அவர்களின் மகனுமாகிய நந்தமுரி ஹரிகிருஷ்ணா, இன்று காலை விபத்தில் பலியானார். 

தெலங்கானா  மாநிலம் நல்கொண்டா பகுதியில் காரில் சென்றுகொண்டிருக்கையில், எதிர்பாராத விதமாக அவரது கார் விபத்தில் சிக்கி கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த ஹரிகிருஷ்ணா, உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு, அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் படுகாயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 61. ஆந்திர மாநில நெல்லூர் மாவட்டத்தில் தனது ரசிகரின் திருமணத்துக்குச் செல்ல, அவரே காரை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது. 
 
ஹரி கிருஷ்ணா, நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தை ஆவார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உறவினரான இவர், தெலுங்கு தேசம் கட்சியில் முக்கியப் பொறுப்பிலும் உள்ளார். ஹரிகிருஷ்ணாவின் மற்றொரு மகன் ஜானகி ராம், கடந்த 2014 -ம் ஆண்டு நடந்த விபத்தில் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored