வெள்ளத்தில் மிதந்த கொச்சி விமான நிலையம்! - 15 நாள்களுக்குப் பிறகு திறப்புSponsoredகனமழை காரணமாக மூடப்பட்டிருந்த கொச்சி விமான நிலையம், 15 நாள்களுக்குப் பிறகு இன்று  திறக்கப்பட உள்ளது. 

கேரளாவில் கொட்டித்தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு உள்ளிட்டவை, பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. இந்தப் பேரிடருக்கு, இதுவரை 370 பேர் பலியாகியுள்ளனர். 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் கடும் சேதத்தைச் சந்தித்துள்ளன. 

Sponsored


Sponsored


இதில், கொச்சி விமான நிலையமும் வெள்ளத்தில் மிதந்தது. இதன் காரணமாக, கடந்த 15-ம் தேதி விமான நிலையம் மூடப்பட்டது. இந்த வெள்ளத்தால் 220 கோடி ரூபாய் அளவுக்கு விமான நிலையத்தில் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டது. கடந்த 15 நாள்களாக கொச்சிக்கு வரும் விமானங்கள் அனைத்தும் திருவனந்தபுரம், கோழிக்கோடு மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன. கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் வர்த்தக விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது, கொச்சி விமான நிலையத்தின் பராமரிப்புப் பணிகள் ஓரளவுக்கு முடிந்ததையடுத்து, இன்று விமான நிலையம் திறக்கப்பட உள்ளது.
 Trending Articles

Sponsored