பீமா கோரேகான் - மகாராஷ்டிர அரசுக்கு மனிதவுரிமை ஆணையம் நோட்டீஸ்!Sponsoredபீமா கோரேகான் விவகாரத்தைக் காட்டி பல மாநிலங்களில் மனித உரிமைக் கருத்தாளர்களைக் கைதுசெய்த விவகாரத்தை தேசிய மனித உரிமை ஆணையமானது சுயவழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. 

வழக்கறிஞரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான சுதா பரத்வாஜ், குடிமையுரிமைச் செயற்பாட்டாளர்களான கௌதம் நவ்லகா, வெர்னான் கன்சால்வஸ், அருண் பெரைரா, கவிஞர் வரவர ராவ் ஆகியோர் மகாராஷ்டிர போலீஸால் நேற்று கைதுசெய்யப்பட்டனர். இது தொடர்பாக ஊடகச் செய்திகளின் அடிப்படையில் சுயவழக்காக எடுத்துக்கொண்ட ஆணையமானது, நான்கு வாரங்களுக்குள் விளக்க அறிக்கையைத் தாக்கல்செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிர அரசின் தலைமைச்செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

Sponsored


இந்தக் கைதில் போலீஸார் உரிய விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை என்றும் மனித உரிமைகளை மீறியுள்ளது என்றும் தேசிய மனித உரிமை ஆணையம் குறிப்பிட்டுள்ளது. கௌதம் நவ்லகாவை டெல்லியிலிருந்து மகாராஷ்டிரத்துக்கு அழைத்துச்செல்வதற்கு புதுடெல்லி உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ள ஆணையம், குற்றத்தை விவரிப்பதற்கு போதுமான காரணங்களைக்கூட கூறமுடியவில்லை என உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதையும் பதிவுசெய்திருக்கிறது. 

Sponsored


மகாராஷ்டிர மாநிலம் பீமாகொரேகானில் இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர், பேஷ்வா படையினருக்கும் தலித் மக்களின் படையினருக்குமான மோதலில் மகர் படையினர் வென்றதன் விழா கடந்த ஆண்டு கடைசியில் நடந்தது. அதையடுத்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் அந்தப் பகுதியில் வன்முறைகள் நிகழ்ந்தன. அந்த வன்முறைகள் தொடர்பாகத்தான் இந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், கருத்தாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், கோவாவில் அம்பேத்கரியல் ஆய்வாளரும் பேராசிரியருமான ஆனந்த் தெல்தும்டே, ஐதராபாத்தில் அயல்மொழி பல்கலைக்கழகப் பேராசிரியர் சத்யநாராயணா, கவிஞர் வரவர ராவின் மகள்கள், கே.வி.குமரநாத் உட்பட அவரின் இரு மருமகன்கள், டெல்க்லியில் நவ்லகா, மும்பையில் அருண் ஃபெரைரா, கன்சால்வஸ் ஆகியோரின் வீடுகளில் புனே போலீஸார் நேற்று திடீரென தேடுதல்வேட்டை நடத்தினர். இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என குடிமையுரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். Trending Articles

Sponsored