ப்ராஃபிட் புக்கிங், ரூபாயின் சரிவு காரணமாக சந்தையில் தொய்வு ! 29-08-2018Sponsoredஒரு சிறிய முன்னேற்றத்துடன் இன்று துவங்கிய இந்திய பங்குச் சந்தை, விரைவிலேயே தடுமாறி, நெடுநேரம் ஒரு குறுகிய பாதையிலேயே பயணித்தபின், வர்த்தக நேர இறுதி நிமிடங்களில் பெரிதாகச் சரிந்து நஷ்டத்தில் முடிவுற்றது.  

ஆசிய சந்தைகள் பெரும்பாலும் ஏற்றத்தில் முடிந்தாலும், ஐரோப்பிய சந்தைகளில் காணப்பட்ட தொய்வுநிலை, அமெரிக்க டாலருக்கெதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 70.51 என ஒரு புதிய லோ-விற்கு சரிந்தது. மற்றும் சமீபத்திய தொடர் முன்னேற்றத்துக்குப் பின் ப்ராஃபிட் புக்கிங் காரணமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு கண்ட பின்னடைவினாலும் இந்திய பங்குச் சந்தை இன்று சரிந்தது.

Sponsored


மும்பை சந்தையின் சென்செக்ஸ் துவக்கத்தில் 38,989.65 என்ற உயரத்தைத் தொட்டு, பின்னர் 38,722.93 என்று 173.70 புள்ளிகள். அதாவது, 0.45 சதவிகித நஷ்டத்துடன் இன்று நிறைவுற்றது.

Sponsored


தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி  46.60 புள்ளிகள். அதாவது, 0.40 சதவிகிதம் சரிந்து 11,691.90-ல் முடிந்தது.

உலோகம் மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் முன்னேற்றம் கண்டாலும், ஏனைய துறைகளைச் சேர்ந்த பங்குகள் ஒரு கலப்படமான முடிவையே இன்று சந்தித்தன. ஒரு பலமான பாசிட்டிவ் தூண்டுதல் இல்லாததும், முதலீட்டாளர்கள் தங்கள் லாபத்தை உறுதிசெய்யும் விதமாக சில விற்பனைகளில் ஈடுபட்டதும்தான் இதற்குக் காரணம்.

சந்தையில் இன்று விலை சரிந்த சில பங்குகள் :

கோல் இந்தியா 2.6%
எய்ச்சேர் மோட்டார்ஸ் 1.8%
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 1.8%
லூப்பின் 1.6%
பவர் கிரிட் 1.6%
இண்டிகோ 5.5%
ப்ராக்டர் & காம்பில் 4.4%
ஐடியா செல்லுலார் 3.3%

விலை அதிகரித்த சில பங்குகள் :

யு.பி.எல்  4.9%
HDIL 9.7%
இந்தியா டூரிஸம் 9.1%
JSW ஸ்டீல் 9%
TTK பிரெஸ்டீஜ் 7.1%
போஸ்ச் 6.4%
நெட்ஒர்க் 18 மீடியா 5.2%
ஜிண்டால் சா 5.1%
SRF 5%
ஜே.பி.எஃப். இண்டஸ்ட்ரீஸ் 5%

இன்று மும்பை பங்குச் சந்தையில் 1281 பங்குகள் லாபத்துடன் முடிந்தன. 1429 பங்குகள் விலை சரிந்தும், 166 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.Trending Articles

Sponsored