`திரும்பி பார்த்த அந்த நிமிடம்...’ - நந்தமுரி ஹரிகிருஷ்ணாவின் மரணத்துக்கு இதுதான் காரணம்!



முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவின் மகன் நந்தமுரி ஹரிகிருஷ்ணாவுக்கு, இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. 


 

Sponsored


முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி ராமாராவின் மகனும் நடிகருமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா, நேற்று காலை கார் விபத்தில் பலியானார்.  61 வயதான நந்தமுரி ஹரிகிருஷ்ணா, நேற்று தன் ரசிகர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நெல்லூர் மாவட்டத்துக்கு காரில் சென்றுள்ளார். ஓட்டுநர் இன்றி அவரே கார் ஓட்டிச் சென்றிருக்கிறார். தெலங்கானா  மாநிலம் நல்கொண்டா பகுதியில் காரில் சென்றுகொண்டிருக்கையில் விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் படுகாயமடைந்த ஹரிகிருஷ்ணா, உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு, அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. 

Sponsored


Sponsored


விபத்து எப்படி நடந்தது என்பதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், `ஹரிகிருஷ்ணாவுடன் காரில் அவரது நண்பர்கள் இரண்டு பேர் பயணித்துள்ளனர். ஹரிகிருஷ்ணா தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் காரை ஓட்டிச் சென்றுள்ளார். அவர், சீட் பெல்ட்டும் அணியவில்லை. அதிவேகத்தில் கார் ஓட்டிய ஹரிகிருஷ்ணா, காரின் ஸ்டீயரிங்கைப் பிடித்தவாறே, காரின் பின்னால் இருந்த தன் நண்பர்களிடம் தண்ணீர் பாட்டில் வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்போது, எதிரே வந்த வளைவை அவர் கவனிக்கவில்லை. கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதிக் கவிழ்ந்தது. ஹரிகிருஷ்ணா, காரில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டார். பின்னால் இருந்த இருவரும் சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்தனர். ஹரிகிருஷ்ணா ஒருவேளை சீட் பெல்ட் அணிந்திருந்தால், அவரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியிருப்பார்’ என்று குறிப்பிட்டனர். 


 

ஹரிகிருஷ்ணாவின் மரணம், ஆந்திரத் திரையுலகிலும் அரசியலிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது மைத்துனரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, ஹரிகிருஷ்ணாவின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலிசெலுத்தினார். அவரின் உடலுக்கு தெலுங்கு திரையுலகினர் பலரும் அஞ்சலிசெலுத்தினர்.


 

தந்தையின் உடலுக்கு அருகே கண்ணீருடன் நின்றுகொண்டிருந்த ஜூனியர் என்.டி.ஆருக்கு, அரசியல் தலைவர்கள், நடிகர்கள் ஆறுதல் கூறினர். ஹரிகிருஷ்ணாவின் மற்றொரு மகன் ஜானகி ராம், கடந்த 2014 -ம் ஆண்டு நடந்த விபத்தில் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. 



Trending Articles

Sponsored