நீட் தேர்வு வினாத்தாளில் குளறுபடி:196 கருணை மதிப்பெண் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்புSponsoredநீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக மாணவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண் வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 11 மொழிகளில் கேள்வித்தாள்கள் இடம் பெற்றிருந்தன. தமிழ் மொழியில் அச்சடிக்கப்பட்ட கேள்வித்தாளில், 49 வினாக்கள் தவறாக இருந்ததால், கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு, ஜூலை 10-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, `தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, தவறாகக் கேட்கப்பட்ட 49 கேள்விகளுக்கும், தலா 4 மதிப்பெண் வீதம், 196 மதிப்பெண் வழங்க வேண்டும்’ என்று  உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ தரப்பில் மேல்முறையீடும், அதற்கு எதிராக ரங்கராஜன் எம்.பி சார்பில் கேவியட் மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டன. 

Sponsored


இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, `இந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு முடிந்து விட்டதால் கூடுதல் மதிப்பெண் தொடர்பாக உத்தரவைப் பிறப்பிக்க முடியாது. அதனால், தமிழ் வினாத்தாளில் தேர்வு எழுதிய மாணவர்களுக்குக் கூடுதலாக 196 மதிப்பெண் வழங்க முடியாது' என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored