வர்த்தக பூசல் கவலை காரணமாக சந்தையில் மீண்டும் தளர்ச்சி 30-08-2018Sponsoredஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் வர்த்தக யுத்தம் பற்றிய கவலையினால் முதலீட்டார்கள் மனநிலை உற்சாகமின்றி இருந்தது கண்டு இந்தியப் பங்குச் சந்தையிலும் இன்று இரண்டாவது நாளாக வர்த்தகம் களையிழந்து காணப்பட்டது. 

சீன நாட்டின் சமீபத்திய பொருளாதார அறிக்கைகள் பெரிதளவில் திருப்திகரமாக அமையாது போனதும், வர்த்தகப் பூசல் காரணமாக அது மேலும் தளர்வடையக்கூடும் என்ற எண்ணத்தினாலும் ஆசிய சந்தைகள் பலவீனமாக இருந்தன.

Sponsored


ஐரோப்பிய சந்தைகளும் வர்த்தக பூசல் கவலை மற்றும் பிரெக்ஸிட் (Brexit) காரணமாக ஏற்படக்கூடிய சில நிச்சயமற்ற தன்மை பற்றிய கவலையினால் தளர்வுடன் இருந்தன.

Sponsored


அமெரிக்க டாலருக்கெதிராக இந்திய ரூபாயின் சரிவு இந்திய சந்தையின் சரிவுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது எனலாம். ஒரு டாலருக்கு 70.86 என்ற நிலைக்கு சரிந்த ரூபாய், சற்று ரெக்கவர் ஆன பின்பும் 70.79 ரூபாய் என்று மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்தது.

மும்பை சந்தையின் சென்செக்ஸ் 32.83 புள்ளிகள் அதாவது 008 சதவிகித நஷ்டத்துடன் 38,690.10 என முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி  15.10 புள்ளிகள் அதாவது 0.13 சதவிகிதம் சரிந்து 11,676.80-ல் முடிந்தது.

வங்கித்துறை பங்குகள் பெரும்பாலும் நஷ்டத்தில் முடிந்தன. உலோகம், மருத்துவம் மற்றும் எப்.எம். சி.ஜி துறை பங்குகள் சற்று முன்னேற்றம் கண்டன.

இன்று விலை அதிகரித்த பங்குகள் :

சன் பார்மா   3.3%
கெயில் இந்தியா  2.5%
டாடா ஸ்டீல்  2.4%
என்.டி.பி.சி  2.1%
யு.பி.எல்  2.1%
ஐ.டி.சி  2%
பார்தி ஏர்டெல் 1.7%
ஹிண்டால்கோ  1.5%
போஸ்ச்  9.4%
AB கேப்பிடல் 4.5%
பெட்ரோனெட் 2.9%
ஆயில் இந்தியா 2.2%

விலை சரிந்த சில பங்குகள் :

எய்ச்சேர் மோட்டார்ஸ் 2%
பஜாஜ் பைனான்ஸ் 1.9%
இண்டிகோ 2.3%
சீமன்ஸ் 2%

இன்று மும்பை பங்குச் சந்தையில் 1459 பங்குகள் லாபத்துடன் முடிந்தன. 1256 பங்குகள் விலை சரிந்தும், 163 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.Trending Articles

Sponsored