ரத்த வெள்ளத்தில் கிடந்த கணவன், குழந்தை, மாமியார்... தூக்கில் தொங்கிய நிலையில் மனைவி!Sponsoredஹரியானாவில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண் தூக்கில் தொங்கிய நிலையிலும், மற்றவர்கள் கழுத்தறுபட்ட நிலையிலும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


ஹரியானா மாநிலம் பிரிஜ்புரா கிராமத்தைச் சேர்ந்தவர், மனிஷ். இவர், தனது தாய், மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடுமையான காயங்களுடன் குடும்பத்தினர் சடலமாகக் கிடந்துள்ளனர். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

Sponsored


இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில்,  பிரிஜ்புரா கிராமத்தில் இருந்து இரவு 9 மணிக்கு அழைப்பு வந்தது. கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நான்கு பேர்  சடலமாகக் கிடப்பதாகக் கூறினர். இதையடுத்து, காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு மனிஷ் (28), அவரது தாயார் மற்றும் குழந்தை தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அவரது மனைவி பின்கி (24) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்தார். நாங்கள் அங்கு விரைந்தபோது, குழந்தை பலத்த காயத்துடன் சுயநினைவின்றி இருந்தது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். கொலை நடந்த வீட்டை ஆராய்ந்ததில், அவரின் மனைவி பின்கி, மூவரை கொலைசெய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனத் தெரிகிறது. ஆனால், அவரின் உடம்பில் காயங்கள் உள்ளன. அந்த அறையின் கதவு மூடப்பட்டிருந்தது. பிங்கி கொலை செய்திருந்தால், அந்த சத்தம் வேறு யாருக்கும் கேட்டிருக்காதா... என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது. முழுமையான விசாரணைக்குப் பின்னரே, முழுத் தகவலும் தெரியவரும். கொலை நடந்த வீட்டை தடயவியல் துறையினர் ஆராய்ந்துவருகின்றனர். அவர்களது அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம்'' என்றனர்.

Sponsored
Trending Articles

Sponsored