அதிகரித்த பெட்ரோல் விலை! - வரலாறு காணாத வீழ்ச்சியில் ரூபாய் மதிப்பு



Sponsored



அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், கச்சா எண்ணெய் விலை நிலவரம் உள்ளிட்ட காரணங்களால் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

துருக்கி நாட்டின்மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிப்பு, மற்ற பிற பொருளாதாரக் காரணிகளால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச அந்நியச் செலாவணி சந்தையில் கடந்த சில நாள்களாகச் சரிந்துவருகிறது. இந்நிலையில், மாதக் கடைசி நாளான இன்று காலை தொடங்கிய வர்த்தக நேரத்தில், வரலாறு காணாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 26 காசுகள் குறைந்து ரூ.70.96 ஆக உள்ளது. இதனால், இந்திய பங்குச் சந்தை ஆட்டம்கண்டுள்ளது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மிகமோசமாகச் சரிந்துள்ளது இதுவே முதல் முறையாகும். 

Sponsored


இது ஒருபக்கம் இருக்க, பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், கடந்த சில தினங்களாக அதிகரித்துவந்த பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னையில், ஒரு லிட்டர் ரூ.81.58 ஆகவும், டீசல் விலை ரூ.74.18 ஆகவும் உயர்ந்துள்ளது. இதனால், அனைத்துத் தரப்பு மக்களும்  கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். 
 

Sponsored




Trending Articles

Sponsored