‘சிவராஜ் சிங் சௌகான் ஆகிய நான்!’- 'பாகுபலி' பட கெட்டப்பில் மத்தியப்பிரதேச முதல்வர்Sponsored'சிவராஜ் சிங் சௌகான் ஆகிய நான்... மகிழ்மதியின் (மத்தியப்பிரதேசத்தின்) அரசனாக (முதலமைச்சராக)...' இப்படி அவர் பேசுவது போல ஃபேன் மேட் வீடியோ யூடியூபில் வைரலாகிவருகிறது. மத்தியப்பிரதேசத்தில், விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க-வினர் ஈடுபட்டுவருகின்றனர். தற்போது அங்கு, பா.ஜ.க ஆட்சிசெய்துவருகிறது. அம்மாநில முதலமைச்சராக சிவராஜ் சிங் சௌகான் உள்ளார். இந்நிலையில், பாகுபலி வெர்ஷனில் ஒரு ஃபேன் மேட் வீடியோ வெளியாகியுள்ளது. இரண்டு நிமிடம்  ஓடும் அந்த வீடியோவில், சிவராஜ் சிங் சௌகான் பாகுபலியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடி, ராகுல் காந்தி, சோனியா காந்தி, கமல் நாத் ஆகியோரை இதில் காட்சிப்படுத்தியுள்ளனர். அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஜோதிரத்யா சிந்தியாவை, ராணா நடித்த பல்வாள் தேவன் கதாபாத்திரத்தில் காட்டியுள்ளனர். பாகுபலி முதலாம் பாகத்தில் பிரபாஸ் சிவலிங்கத்தைத் தூக்கிச்செல்வதுதான் ஹைலைட் சீன். அதில், சிவராஜ் சௌகானின் முகத்தை இடம்பெறச் செய்துள்ளனர். இந்த ஃபேன் மேட் வீடியோவில், பாகுபலி படத்தில் இருந்த ஹைலைட் சீன்கள் சிவராஜ் சிங் சௌகான் வெர்ஷனில் இடம்பெறச்செய்துள்ளனர்.

இந்த வீடியோவுக்கு, பலர் தங்களது கருத்துகளைப் பதிவுசெய்துவருகின்றனர். பலர், 'சிவராஜ் சிங் சௌகானுக்கு கட்டப்பா பாத்திரம் கொடுத்திருக்கலாம்' என்று தெரிவித்துள்ளனர். மேலும் சிலர், எடிட்டிங்கை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored