மழையைத் தொடர்ந்து கேரளாவை மிரட்டும் எலிக் காய்ச்சல்!- மாநிலம் முழுவதும் அலெர்ட்Sponsoredகேரளாவில், வெள்ளம் வடிந்த நிலையில் மீட்புப் பணிகள் அதி தீவிரமாக நடந்து வருகிறது. அதே நேரத்தில், மழைக் காரணமாக நோய்த் தொற்றுகளும் அதிகரித்துள்ளது. 

கேரள மாநிலத்தில் கடந்த 8-ம் தேதி பெய்யத் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை, அம்மாநில மக்களை வெள்ளத்திலும் கண்ணீரிலும் தத்தளிக்க விட்டது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளை இழந்துள்ளதால், மத்திய, மாநில அரசுகள் என அனைத்துத் தரப்பிலும் இருந்து நிவாரண உதவிகள் வந்த வண்ணம் உள்ளன. முகாமைவிட்டு, வீடு திரும்பிய மக்களுக்கு மிகுந்த அச்சுறுத்தலாகப் பாம்புகள் உள்ளிட்ட விஷ உயிரினங்கள் இருந்தன. ஆனால், தற்போது மக்களிடம் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

Sponsored


கோட்டயம் மாவட்டம் கடநாட் பகுதியைச் சேர்ந்த பி.வி ஜார்ஜ் (62) என்பவர் எலிக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார் என்ற தகவல் பரவியது. இதையடுத்து, நடந்த விசாரணையில் எலிக் காய்ச்சல் பாதிப்பால் பி.வி ஜார்ஜ் உயிரிழந்ததை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரபூர்வமாக உறுதி செய்தது. இதனால், சுகாதார நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மாநிலம் முழுவதும் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Sponsored


இதனிடையில், வெள்ளத்தின்போது மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரிக்‌ஷா ஓட்டுநரான ஷியாம் குமார் என்பவரும் எலிக் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 464 பேர்களில் 190 பேருக்கு எலிக் காய்ச்சல் பாதிப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, கோட்டயம், ஆலப்புழா உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் சுகாதார நடவடிக்கையை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. Trending Articles

Sponsored