`நேரம் சரியில்லையின்னு ஜோசியர் சொன்னார்!' - மரணத்துக்கு முன் ஊழியர்களிடம் ஹரிகிருஷ்ணா பேசிய வார்த்தைசாலை விபத்தில் உயிரிழந்த தெலுங்கு நடிகர் நந்தமுரி ஹரிகிருஷ்ணாவின் உடல் நேற்று மாலை தெலங்கானாவின் ஃப்லிம் நகரில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

Sponsored


ஹரிகிருஷ்ணாவின் உடலுக்குத் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு, தெலங்கானா ஆளுநர் நரசிம்மன், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். தெலுங்கு திரையுலகினர் பலரும் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். ஹரிகிருஷ்ணாவின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்களும், சினிமா ரசிகர்களும் கலந்துகொண்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 

Sponsored 

Sponsored


மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வரும் பிரபல நடிகருமான என்.டி.ராமாராவின் மகன் நந்தமுரி ஹரிகிருஷ்ணா, தன் தந்தையைப் போலவே அரசியலிலும் சினிமாவிலும் பட்டையைக் கிளப்பினார்.  61 வயதான இவர், நேற்று முன்தினம் காலை, தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். சீட் பெல்ட் அணியாமல், அதிவேகத்தில் காரை ஓட்டி வந்ததே அவரின் மரணத்துக்கு முக்கிய காரணம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.  அவரின் மரணத்துக்கு முன் அவர் தங்கியிருந்த ஹோட்டலில் என்ன நடந்தது என்பது குறித்து ஹோட்டல் ஊழியர்கள் தற்போது பகிர்ந்துள்ளனர்.

ஹரிகிருஷ்ணா தன் ரசிகர் ஒருவரின் திருமணத்துக்கு நண்பர்கள் இருவருடன் நெல்லூருக்கு புறப்பட்டுள்ளார். இதுபோன்று வெகுதூர பயணங்கள் செல்லும்போது, ஹைதராபாத்தில் உள்ள ஹாவனாம் ஹோட்டலில் தங்குவது ஹரிகிருஷ்ணாவின் வழக்கம். ஆகஸ்ட் 28-ம் தேதி இரவு அந்த ஹோட்டலுக்கு தன் நண்பர்களுடன் சென்றுள்ளார்.  ஹாவனாம் ஹோட்டலில் உள்ள ஊழியர்கள் அனைவரும் ஹரிகிருஷ்ணாவுக்கு நன்றாக அறிமுகமானவர்கள். அன்று இரவு ஹோட்டல் ஊழியர்களுடன் சிறிது நேரம் உரையாடியுள்ளார். மறுநாள் அதிகாலை சாலை விபத்தில் ஹரிகிருஷ்ணா பலியானதாக வந்த செய்தி ஹோட்டல் ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகன்களுடன் நந்தமுரி ஹரிகிருஷ்ணா..
 

இதனிடையே, ஹரிகிருஷ்ணா மரணத்துக்குப் பிறகு ஊடகங்களுக்கு ஹோட்டல் ஊழியர் ஒருவர் அளித்த பேட்டியில், `ஹரிகிருஷ்ணா எங்கள் அனைவரிடமும் நன்றாகப் பேசுவார். விபத்து நடந்த அன்று ஹோட்டலில் இருந்து புறப்படுவதற்கு முன்னர் எங்களிடம் சற்று நேரம் பேசினார். ``எனக்கு நேரம் சரியில்லையாம்.. எங்கள் ஜோசியர் சொன்னார். அக்டோபர் மாதம் வரை வெகுதூரப் பயணங்களைத் தவிர்க்கும்படி எச்சரித்திருக்கிறார். நான் என் ரசிகரின் திருமணத்துக்காக கார் எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார். 

ஹரிகிருஷ்ணாவின் ஓட்டுநர் அவரை தேடிக்கொண்டு ஹோட்டலுக்கே வந்துவிட்டார். ஆனால், ஹரிகிருஷ்ணாவோ ஓட்டுநருக்கு டிப்ஸ் கொடுத்து ஓய்வெடுக்கும்படி கூறி அனுப்பி வைத்துவிட்டார். அன்று வழக்கத்தைவிட ஹரிகிருஷ்ணா உற்சாகமாகக் காணப்பட்டார்.  ஹோட்டலில் இருந்து கிளம்பிய சில மணி நேரங்களில் கார் விபத்தில் அவர் பலியானதாக செய்தி வந்தது. எங்களால் இந்த நிமிடம்வரை அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை’ என்று கண்ணீருடன் கூறியுள்ளார். 

இறுதி சடங்கு செய்யும் ஜூனியர் என்.டி.ஆர்..
 

ஹரிகிருஷ்ணாவின் மரணம் தெலங்கானாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் அவரின் உடலுக்கு அரசு மரியாதை செய்ததை ஒரு தரப்பு கடுமையாக விமர்சித்து வருகிறது. எந்த முக்கிய பொறுப்பிலும் இல்லாத ஒருவருக்கு எதற்காக அரசு மரியாதை என்று சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். Trending Articles

Sponsored