வெளிநாடுகளுக்குச் சென்று நிதி திரட்ட உள்ள கேரளா!Sponsoredகேரளாவில் அமைச்சர் தலைமையிலான உயர்மட்டக் குழு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்குச் சென்று நிதி திரட்ட முயற்சி செய்ய இருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் மொத்தமாக 483 பேர் இறந்துள்ளதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும், 14 மாவட்டங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மொத்தமாக 22,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக 2,000 கோடி ரூபாய் தேவை என மத்திய அரசிடம் கேரளா கேட்டிருந்தது. ஆனால், 600 கோடி ரூபாய் மட்டுமே முதல்கட்ட நிதியாக வழங்கப்பட்டுள்ளது. 

Sponsored


இந்த நிலையில், கேரள உயர்மட்டக் குழுவினர் மத்திய கிழக்கு நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, கனடா போன்ற நாடுகளில் நிதி திரட்ட உள்ளனர். இந்தப் பயணம் செப்டம்பர் 10 முதல் 15-ம் தேதி வரையில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது, இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுக்கும் சென்று நிதி திரட்ட உள்ளனர். வெள்ளத்தால் சபரிமலைப் பகுதிகளும் கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளது. வரும் நவம்பர் 7-ம் தேதி முதல் அங்கு பூஜைகள் தொடங்க இருப்பதால், முதலில் அந்தப் பகுதியை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு அந்த வேலைகள் டாடா ப்ராஜெக்ட் லிமிடெட்ஸிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Sponsored
Trending Articles

Sponsored