``ஹர்திக் படேலுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்'' - மத்திய அமைச்சர்!Sponsoredகுஜராத்தில், 'இட ஒதுக்கீடு கேட்டுப் போராடிவரும் ஹர்திக் படேலுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்' என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

மத்திய சமூக நீதித்துறை அமைச்சராக இருப்பவர், ராம்தாஸ் அத்வாலே. குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்குச் சென்ற இவர், நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ` குஜராத்தில் இட ஒதுக்கீடு கேட்டுப் போராடிவரும் பதிதார் இனத்தைச் சேர்ந்த ஹர்திக் படேலுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் தூதுவராக இருந்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளேன். காங்கிரஸுடன் இருப்பதால், பதிதார் இன மக்கள்  இட ஒதுக்கீடு பெற மாட்டார்கள் என்று ஹர்திக்குக்கு நான் சொன்னேன். ஹர்திக்,  பி.ஜே.பி-யுடன்  சேர வேண்டும். அரசாங்கத்துடன் ஒரு பிரச்னையைப் பற்றி விவாதிக்க நான் அவரை கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தைமூலம் தீர்வு காண முடியும் என எனக்கு நம்பிக்கையுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும். ஆனால், கடந்த முறை பெற்ற இடங்களைவிட 30 முதல் 40 இடங்கள் குறைவாகக் கிடைக்கும்' என்றார் அத்வாலே.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored