ரூ.2,640.62 கோடி நிலுவைத் தொகையை செலுத்திய அனில் அம்பானி!Sponsoredமகாராஷ்டிரா அரசுக்குச் செலுத்தவேண்டிய நிலுவைத் தொகையை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் உள்கட்டமைப்பு நிறுவனம் செலுத்தியுள்ளதாக, அம்மாநில அரசு அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது. 

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் உள்கட்டமைப்பு நிறுவனம், கடந்த 2016-ம் ஆண்டு முதல் மகாராஷ்டிரா அரசுக்கு வரி பாக்கி மற்றும் மின்கட்டணத் தொகையைச் செலுத்தாமல் இருந்துவந்துள்ளது. அரசுக்குச் செலுத்தவேண்டிய நிலுவைத் தொகையை அனில் அம்பானி செலுத்திவிட்டதாக, மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தொகை முழுவதையும் இரண்டு தவணை முறையாகச் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆகஸ்ட் 29 மற்றும் ஆகஸ்ட் 30 ஆகிய தேதிகளில் ரூ.2,640.62 கோடியை நிறுவனம் செலுத்தியுள்ளது. 

Sponsored


முன்னதாக, மும்பையில் இயங்கிவரும் எரிசக்தி நிறுவனத்தை ரூ.18,800 கோடிக்கு அதானி டிரான்ஸ்மிஷனிடம் விற்பனை செய்யப்பட்டதாக, இந்த வார தொடக்கத்தில் ரிலையன்ஸ் உள்கட்டமைப்பு நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு, ரூ.22,000 கோடி அளவில் பெரும் கடன் நெருக்கடியில் சிக்கியிருந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடன் தொகையை 65 சதவிகிதமாகக் குறைத்து, ரூ. 7,500 கோடியாக உள்ளது. 

Sponsored
Trending Articles

Sponsored