முதல்முறையாக இதர பிற்படுத்தப்பட்டவர்களைக் கணக்கெடுக்கிறது மத்திய அரசு!Sponsoredஇந்தியாவில் முதல்முறையாக இதர பிற்படுத்தப்பட்டவர்களைத் தனியாக கணக்கெடுக்க உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

1931-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அடுத்து வரும் 2021-ம் ஆண்டு நடத்தப்பட உள்ளது. வரும் கணக்கெடுப்பில் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதல் முறையாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைத் தனியாக கணக்கெடுக்க உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாநிலங்களிடமும் தனியாக இதர பிற்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை இருக்கும். ஆனால், மத்திய அரசு இதுவரை மொத்தமாக கணக்கெடுப்பை நடத்தியது இல்லை. 

Sponsored


மத்திய உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குழு இது குறித்து ஆலோசனை நடத்தியது. அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், ``சுமார் 25 லட்சம் தகவல் சேகரிப்பாளர்களுடன் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் வரும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதன் இறுதி அறிக்கை அடுத்த மூன்று வருடங்களுக்குள் வெளியிடப்படும். துல்லிய கணக்கெடுப்புக்காக வரைபடங்களைப் பயப்படுத்தி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Sponsored
Trending Articles

Sponsored