கேரளாவை மிரட்டும் எலிக் காய்ச்சல்: பலி எண்ணிக்கை 12ஆக உயர்வு!Sponsoredவெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டுகொண்டிருக்கும் கேரளாவை எலிக்காய்ச்சல் மிரட்டி வருகிறது. இதன் காரணமாக இன்று மட்டும் இருவர் உயிரிழந்த நிலையில், இதுவரை 12 பேர் பலியாகி இருப்பதால் பொதுமக்களிடம் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

கடவுளின் தேசம் என வர்ணிக்கப்படும் கேரளாவை இயற்கை கடுமையாகச் சோதித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு ஒகி புயலால் பாதிக்கப்பட்ட இந்த மாநிலம், அதிலிருந்து மீண்டு வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு பெய்த தொடர்மழையால் கடும் பாதிப்புக்கு உள்ளானது. மாநிலத்தில் பெய்த தொடர்மழையால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக மாறியது. வீடுகள் தண்ணீரில் மூழ்கியதால் லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். 

Sponsored


வெள்ளம் வடிந்த நிலையில், நிவாரண முகாம்களில் தங்கியிருந்த மக்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்பி வருகிறார்கள். இந்த நிலையில், கேரள மக்களை எலிக்காய்ச்சல் மிரட்டி வருகிறது. வேகமாகப் பரவும் எலிக்காய்ச்சலைக் கட்டுப்படுத்த கேரள சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் மாவட்டங்களில் இந்தக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதால், கேரள அரசு அந்த மாவட்டங்களில் ரெட் அலார்ட் விடுத்துள்ளது. 

Sponsored


மழையின் பாதிப்புக் குறைவாக இருந்த கோழிக்கோடு மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவது தெரியவந்திருக்கிறது. இந்த மாவட்டத்தில் பலி எண்ணிக்கை அதிகரித்தபடியே இருப்பதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். 4 லட்சம் பேருக்குத் தடுப்பு ஊசிகள் போடப்பட்டுள்ளன. இருப்பினும் காய்ச்சலைக் கட்டுப்படுத்த முடியாமல் சுகாதாரத்துறையினர் திகைத்து வருகிறார்கள். 

இந்த நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் இருவர் எலிக்காய்ச்சலுக்குப் பலியான சம்பவம் அதிகாரிகளையும் பொதுமக்களையும் திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறது. முக்கம் பகுதியைச் சேர்ந்த சிவதாசன் என்பவரும் கரந்தூரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரும் இன்று எலிக்காய்ச்சலுக்கு உயிரிழந்தனர். கேரள மாநிலத்தில் இதுவரை 12 பேர் எலிக்காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர். அதனால் பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. Trending Articles

Sponsored