வாடிக்கையாளருக்குப் பரிமாறப்பட்ட வெஜ் பிரியாணியில் புழு! - சர்ச்சையில் சிக்கிய `ஐக்கியா’ நிறுவனம்Sponsoredஹைதராபாத்தில் பிரபல ஐக்கியா உணவகத்தில் சாப்பிடச் சென்ற ஒருவர், ஆர்டர் செய்த வெஜ் பிரியாணியில் கம்பளிப்புழு இருந்துள்ளது. 

Photo Credit -twitter/@abeedmohammed9

Sponsored


தொழில்நுட்ப தொழில்துறையின் முக்கிய மையம் என்று அறியப்படும் நகரம் ஹைதராபாத். இங்கு, உணவகங்களும், கடைகளும் அதிகம். `ஃபர்னிச்சர்' உலகின் டான் என மகுடம் சூட்டிய `ஐக்கியா' (IKEA) நிறுவனம், இந்தியாவில் தனது கிளையை சமீபத்தில் ஹைதராபாத்தில் நிறுவியது. தொடங்கிய முதல் நாளே, 40,000-க்கும் மேற்பட்டோர் திரண்டதால் ஹைதராபாத்தின் ஹைடெக் சிட்டியைச் சுற்றி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நகரமே ஸ்தம்பித்து விட்டது. இதனால், ஊடகங்களின் தனிக்கவனத்தை ஐக்கியா ஈர்த்தது.

Sponsored


இப்படியான, புகழின் உச்சத்தில் உள்ள ஐக்கியா விற்பனைக் கூடத்தின் உணவகத்தில் சாப்பிடச் சென்ற அபீத் முகம்மதுக்கு காத்திருந்தது அதிர்ச்சி. கடந்த 31-ம் தேதி உணவகத்துக்குச் சென்ற முகம்மது, வெஜ் பிரியாணி ஆடர் செய்திருக்கிறார். இதனையடுத்து, ஆர்டர் செய்த உணவான வெஜ் பிரியாணி முகம்மதுவுக்கு பரிமாறப்பட்டுள்ளது. அதில், புழு (caterpillar) நெளிவதைக் கண்டுள்ளார். பதறிய முகம்மது, ஹோட்டல் நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். அதோடு, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்திருக்கிறார். 

முகம்மது தனது ட்விட்டர் பக்கத்தில், `ஆடர் செய்த பிரியாணியில் புழு இருப்பதைக் கண்டேன். மிகவும் நியாயமற்ற உணவு' எனப் பதிவிட்டு, உணவில் புழு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். இந்த விவகாரம் சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவியது. இதனையடுத்து, உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் ஹோட்டல் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, பிரியாணியில் புழு இருந்ததை ஒப்புக்கொண்ட நிர்வாகம் அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டது. இதன் பிறகு, சுகாதாரமற்ற உணவை சமைத்தற்காக ரூ.11,000 அபராதம் விதித்த அதிகாரிகள், ஊழியர்களை எச்சரித்துச் சென்றனர்.Trending Articles

Sponsored