ஆர்.டி.ஐ சட்டத்தில் தகவல் அறிய ஜி.எஸ்.டி - அதிர்ச்சியில் சமூக ஆர்வலர்கள்Sponsoredதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுத் தாக்கல் செய்த மனு தாரருக்கு தகவலுடன் சேர்த்து ஜி.எஸ்.டி வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இது சமூக ஆர்வலர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சமூக ஆர்வலரான அஜய் தூபே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வீட்டுவசதி மற்றும் கட்டுமான மேம்பாட்டு வாரியத்திடமிருந்து பல்வேறு தகவல்களைக் கேட்டுள்ளார். அவருக்கான தகவல் 18 பக்கங்கள் கொண்ட பேப்பரில் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், 18 பக்கங்களில் ஒரு பக்கத்துக்கு 2 ரூபாய் வீதம் மொத்தம் 36 ரூபாய் பெறப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது மத்திய அரசின் ஜி.எஸ்.டி ரூ 3.50 மற்றும் மாநில அரசின் ஜி.எஸ்.டி ரூ. 3.50 என ஒட்டு மொத்தமாக 43 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. 

Sponsored


``தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொது விஷயத்தைத் தெரிந்துகொள்ள ஜி.எஸ்.டி விதிப்பது நியாயமற்றது மற்றும் சட்டவிரோதமானது. நான் இதை எதிர்த்து சட்ட ரீதியாக முறையீடு செய்ய உள்ளேன்” என சமூக ஆர்வலர் அஜய் தூபே தெரிவித்துள்ளார். 

Sponsored


மக்களுக்கு வெளிப்படைத் தன்மையைத் தெரிவிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டது தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம், ஆனால் அதன் மூலம் தகவல் அறியக் கூட ஜி.எஸ்.டி விதித்திருப்பது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.Trending Articles

Sponsored