வாக்குறுதியைக் காப்பாற்றாத மத்தியப் பிரதேச அரசு - பிச்சையெடுக்கும் மாற்றுத்திறனாளி தடகள வீரரின் கதைSponsoredமத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தடகள வீரர் மன்மோகன் சிங் லோதிக்கு அம்மாநில அரசு அறிவித்த அரசு வேலை கிடைக்காத நிலையில், அவர் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். 

மத்தியப் பிரதேச மாநிலம் நரசிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தடகள வீரர் மன்மோகன் சிங் லோதி. அவர், 2009-ம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் ஒரு கையை இழந்தார். இருப்பினும், தடகளப் போட்டிகளில் பங்கேற்று, தேசிய அளவில் மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு வெண்கலப் பதக்கத்தைப் வென்றுகொடுத்துள்ளார். மாநில அளவில் பல பதக்கங்களையும் வென்றுள்ளார். மேலும், அவர் தேசிய அளவிலான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். தற்போது, அவர் போபால் நகர வீதிகளில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்.

Sponsored


Sponsored


இதுகுறித்து பேசிய அவர், 'நான்கு முறை நான் முதல்வரைச் சந்தித்துள்ளேன். எனக்கு அரசு வேலை அளிப்பதாக அவர் வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால், இதுவரையில் அது நிறைவேற்றப்படவில்லை. பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளேன். விளையாடுவதற்கும் என்னுடைய குடும்பத்தைக் காப்பதற்கும் எனக்குப் பணம் தேவை. முதலமைச்சர் எனக்கு உதவவில்லையென்றால், நான் தொடர்ச்சியாக பிச்சையெடுத்து எனது வாழ்க்கையைப் பார்த்துக்கொள்வேன்' என்றார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், அரசு வேலைக்காக லோதி உண்ணாவிரதம் இருந்தார். இருப்பினும் அவருக்கு வேலை வழங்கப்படவில்லை. Trending Articles

Sponsored