லோகோ பைலட் இல்லாததால் 10 ரயில்கள் ரத்து - பயணிகள் அதிர்ச்சிSponsoredதிருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் லோகோ பைலட் இல்லாத காரணத்தால் 10 பயணிகள் ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் குருவாயூர் - திருச்சூர் பயணிகள் ரயில், திருச்சூர் - குருவாயூர், புனலூர் - கொல்லம், கொல்லம் - புனலூர், குருவாயூர் - புனலூர், புனலூர் - குருவாயூர், எர்ணாகுளம் - காயாங்குளம் வழித்தடத்தில் 10 பயணிகள் ரயில் இன்று இயங்காது என திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. ரயில் தண்டவாளத்தில் சிறு பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த ரயில்கள் இயங்காது என திருவனந்தபுரம் டிவிஷன் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், ரயில்களை இயக்கும் லோகோ பைலட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ரயில்கள் இயக்கப்படாமல் உள்ளதாகப் பயணிகள் சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் பெய்த மழையால் திருவனந்தபுரம் டிவிஷனில் 20 லோகோ பைலட்டுகள் பாதிக்கப்பட்டு முகாம்களில் இருந்ததாகவும். அவர்கள் இன்னும் பணிக்குத் திரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது. திருவனந்தபுரம் டிவிஷனில் 525 லோகோ பைலட் பணியிடங்கள் உள்ளதாகவும், இப்போது 420 லோகோ பைலட்டுகளே இருக்கிறார்கள் எனவும் இதன்காரணமாகவே அவ்வப்போது பராமரிப்பு பணி என்ற பெயரில் ரயில்கள் ரத்துச்செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored