எலிக்காய்ச்சலுக்கு 3 நாளில் 31 பேர் உயிரிழப்பு! - கேரளாவில் தொடரும் சோகம்Sponsoredகேரள மாநிலத்தில் எலிக்காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த 3 நாளில் மட்டும் 31 பேர் எலிக்காய்ச்சலுக்கு பலியானதால் கேரள மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்ததால் பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்தது. நிலச்சரிவு ஏற்பட்டதில் வீடுகள் இடிந்து விழுந்தன. சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவை கடுமையாகச் சேதமடைந்தன. இந்த வெள்ளத்துக்கு 483 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த சோகம் மறைவதற்கு முன்பாக எலிக்காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். 

Sponsored


தண்ணீர் மூலமாக எலிக்காய்ச்சல் பரவும் நிலையில், தற்போது வெள்ளம் முழுமையாக வடியாத நிலையில் இந்த நோய் வேகமாகப் பரவுகிறது. குறிப்பாக கோழிக்கோடு மாவட்டத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் நேற்று (2-ம் தேதி) ஒரே நாளில் 10 பேர் இறந்துள்ளனர். அதனால் அந்த மாவட்டத்தில் மட்டும் கடந்த 3 நாளில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 

Sponsored


இதனிடையே, துப்புரவுப் பணியாளர்கள் இருவர் எலிக்காய்ச்சலுக்குப் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாவூர் அருகே உள்ள ஐமூரி பகுதியைச் சேர்ந்த 48 வயதான குமாரி என்பவரும் சாலக்குடி அருகே உள்ள வெள்ளிக்குளங்கரா பகுதியைச் சேர்ந்த 36 வயதான சுரேஷ் ஆகியோர் அந்தப் பகுதிகளில் வீடுகளில் தேங்கிக் கிடந்த வெள்ளநீரை அகற்றும் பணியில் ஈடுபட்ட நிலையில் எலிக்காய்ச்சலுக்கு உயிரிழந்த சம்பவம் துப்புரவுப் பணியாளர்களை அச்சம் அடையவைத்துள்ளது. 

கேரளாவில் கடந்த 3 நாள்களில் மட்டும் 31 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன், 68 பேர் எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதில் 33 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. திருவனந்தபுரம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் வேகமாகப் பரவும் எலிக்காய்ச்சலைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.Trending Articles

Sponsored