தபால் அலுவலக வங்கிச்சேவை திட்டம் குறித்து தெரிந்துகொள்வோம்!Sponsoredஇதோ, அதோ என்று சொல்லப்பட்டுவந்த தபால் அலுவலக வங்கிச்சேவை (India Post Payment Bank, சுருக்கமாக IPPB) இப்போது நிஜத்திலேயே நடைமுறைக்கு வந்துவிட்டது. கடந்த சனிக்கிழமை அன்று நாடு முழுக்க இந்தத் திட்டம் முறைப்படி தொடங்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி புது டெல்லியிலும், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையிலும் தொடங்கி வைத்த இந்தத் திட்டம் நாடு முழுவதும் உள்ள 1.55 லட்சம் தபால் நிலையங்கள் மூலம் வங்கிச் சேவை அளிக்கப் போகிறது. இந்தத் திட்டம் குறித்த முக்கிய விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்.

Sponsored


1. கடந்த ஆண்டுகளில் ஏர்டெல் மற்றும் பேடிஎம் நிறுவனங்களுக்குப் பிறகு பேமென்ட் பேங்க் சேவைக்கான அனுமதியை ரிசர்வ் வங்கி தந்தது. இப்போது இந்திய அஞ்சல் துறைக்கும் பேமென்ட் வங்கிச் சேவை வழங்க அனுமதி தந்து, அது செயல்படத் தொடங்கியிருக்கிறது.   

Sponsored


2. பேமென்ட் பேங்க் என்பது தனிநபரிடமிருந்தும் சிறு வர்த்தக நிறுவனங்களிலிருந்தும் ரூ.1 லட்சம் வரையில் டெபாசிட் திரட்ட முடியும். 

3. 650 தபால் அலுவலகங்கள், 3,250 சேவை மையங்கள், 11 ஆயிரம் கிராமப்புற தபால் மையங்கள், வீடுகளுக்கு நேரில் சென்று வங்கிச்சேவை வழங்க உள்ளது. 

4. இந்த வங்கிச்சேவையை 1.55 லட்சம் தபால் நிலையங்களுடன் இணைந்து வழங்குகிறது. 

5. போஸ்ட் ஆபீஸ் சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு, பணப்பரிமாற்றம், பிற வங்கிக் கணக்குக்கு நேரடியாகப் பணப்பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்க இருக்கிறது. 

6. போஸ்ட் ஆபீஸ் வங்கிச் சேவையில் தற்போதுள்ள தபால் நிலைய சேமிப்புக் கணக்குகளும் இணைக்கப்பட உள்ளது. மேலும், ஆர்.ஜி.டி.எஸ், நெஃப்ட், ஐ.எம்.பி.எஸ் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அனுமதி கிடைத்துள்ளது. இதன்மூலம் ஒரு வங்கிக்கணக்கில் இருந்து நேரடியாக மற்றொரு வங்கிக்கணக்குக்குப் பணத்தைப் பரிமாற்றம் செய்ய வேண்டும். 

7. போஸ்ட் ஆபீஸ் ஆன்லைன் வங்கிச்சேவை மற்றும் மின் கட்டணம், டி.டி.ஹெச், சமையல் எரிவாயு இணைப்பு உள்ளிட்ட சேவைகளை அளிக்க புதிய மொபைல் ஆப்பை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. 

8. போஸ்ட் ஆபீஸ் வங்கிச்சேவை சீரான முறையில் வழங்க 100-க்கும் மேற்பட்ட அமைப்புகள் இருப்பதால், வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக் கணக்கில் பணம் வழங்க முடியும். மேலும், ரூ.1 லட்சம் வரையில் டெபாசிட் திரட்ட வசதியுள்ளதால், பொதுத்துறை வங்கிகளில் இருந்தும் பணத்தை டிரான்ஸ்பர் செய்ய முடியும். 

9. இந்த அமைப்புகள் பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் மூலமாக போஸ்ட் ஆபீஸ் வங்கிச்சேவை வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளும். 

10. வாடிக்கையாளர்கள் போஸ்ட் ஆபீஸ் வங்கிக் கணக்கை மொபைல் ஆப் மூலம் இயக்க முடியும். இந்த ஆப் மூலம் குறைந்த அளவுக்குத்தான் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். 

வாடிக்கையாளர் கே.ஓய்.சி (வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்வோம்) விதிகளை பூர்த்தி செய்த பின்னர், இந்த ஆப் மூலம் முழுமையான வங்கிச்சேவையை பெற முடியும்.

அனைவருக்கும் வங்கிச்சேவை என்கிற இலக்கை நோக்கி நம் நாடு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அஞ்சலக வங்கிச் சேவை மூலம் நாடு முழுக்க உள்ள லட்சக்கணக்கான கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வங்கிச் சேவை இன்று கிடைக்கும். இது அவர்களை பொருளாதார ரீதியில் முன்னேற்றம் காண வைக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. Trending Articles

Sponsored