‘தோஷம் இருக்குது; பிரச்னை ஏற்படும்' - பரிகாரத்தைக் கழிக்க சிறைக்குச் சென்ற தொழிலதிபர்Sponsoredஉத்தரப்பிரதேசத்தில் உள்ள தொழிலதிபர் தன் ஜாதகத்தில் உள்ள சிறை தோஷத்தைப் போக்க ஒரு நாள் சிறையில் தங்கிப் பரிகாரம் செய்துள்ளார். 

அதிகமாகத் தவறு செய்யும் குற்றவாளிகள் எப்போதும் சிறையில் இருக்க விரும்புவதில்லை. ஆனால், சில மூட நம்பிக்கையாளர்கள் அரசின் உதவியுடன் சிறைச்சாலையில் தங்களின் நேரத்தைச் செலவிடுகின்றனர். ஜாதகங்களின் மீது இருக்கும் நம்பிக்கையே இதற்கு முழு காரணம். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோமதி நகரைச் சேர்ந்த தொழிலதிபர் ரமேஷ் சிங். 38 வயதான இவர் கடந்த மே மாதம் ஒரு நாள் முழுவதும் சிறையில் இருந்துள்ளார். 

Sponsored


இது குறித்து ரமேஷ் சிங் கூறும்போது, ``எங்கள் குடும்ப ஜோதிடர் என் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு எனக்கு ‘சிறை தோஷம்’ இருப்பதாகக் கூறினார். இதனால் என் எதிர்கால வாழ்க்கையில் பிரச்னைகள் ஏற்படும் என்றார். இதைக்கேட்டு என் குடும்பத்தில் அனைவரும் கவலையடைந்தனர். எந்தத் தடைகளும் இன்றி ஒருநாள் முழுவதும் சிறையில் இருந்தால் நல்ல பலன் கிடைக்கும் எனத் தோஷத்துக்கான பரிகாரத்தையும் ஜோதிடரே வழங்கினார். இதன் பிறகு, ஒரு நாள் சிறையில் இருக்க அனுமதி கேட்டு என் ஜாதக நகலுடன் மற்ற விவரங்களை இணைத்து மாவட்ட நிர்வாகத்திடம் நான் விண்ணப்பித்திருந்தேன். அவர்கள் என் விவரத்தை ஆராய்ந்த பிறகு எனக்கு அனுமதி அளித்தனர். நான் சிறையில் இருந்தபோது அங்கு கைதிகளுக்கு தரப்படும் உணவையே நானும் உட்கொண்டேன். அப்போது என் பாவங்களை மன்னித்து சரியான பாதையில் செல்ல உதவுங்கள் என கடவுளிடம் பிரார்த்தனை செய்துகொண்டேன்” எனக் கூறினார். 

Sponsored


மாவட்ட ஆட்சியர் சௌசல் ராஜ் சர்மா கூறும்போது, `` ஜாதகத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உதவுகிறது. இது போன்று வருடத்துக்கு 24 விண்ணப்பங்கள் வருகிறது, அதில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் சிறையில் இருக்க அனுமதிக் கேட்கப்படும். நாங்கள் விண்ணப்பதாரரின் முழு விவரம் மற்றும் ஜாதகத்தையும் ஆராய்ந்த பின்னரே அவர்களுக்கு அனுமதி வழங்குகிறோம். எந்த தவறும் செய்யாமல் சிறையில் அடைக்கச் சட்டத்தில் இடமில்லை. எனினும் அவர்களுடைய சொந்த விருப்பத்தின் படியே கோரிக்கையை ஏற்கிறோம். இது முற்றிலும் மதரீதியிலானது மட்டுமே ” எனத் தெரிவித்துள்ளார். 

இந்தப் பரிகாரம் குறித்து லக்னோ பல்கலைக்கழக ஜோதிடத் துறையைச் சேர்ந்த பிபின் பாண்டே கூறுகையில், `` ஒருவருடைய ஜாதகத்தில் 8-ம் இடத்தில் ராகு இருந்தால் அவர் சிறை செல்வார். மேலும், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. அதே ராகு 12-ம் இடத்தில் இருந்தால் பலமுறை சிறை செல்ல வேண்டி வரும்” எனத் தெரிவித்துள்ளார். 

Source : Times of indiaTrending Articles

Sponsored