`ஃபேஸ்புக்கில் ஆக்டிவ்வாக இருந்தாதான் சீட்'- ம.பி காங்கிரஸின் தேர்தல் கண்டிஷன்!



Sponsored



மத்தியப் பிரதேசத்தில், 'வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில், சமூக வலைதளங்களில் சிறப்பாகச் செயல்படுபவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படும்' என்று அம்மாநில காங்கிரஸ் அறிவித்துள்ளது. 

கோப்புப் படம்

Sponsored


மத்தியப்பிரதேசத்தில், இந்த ஆண்டின் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ளது. தற்போது, பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் இந்த மாநிலத்தில், பா.ஜ.க, காங்கிரஸ் இரு கட்சிகளும் தேர்தலுக்குத் தயாராகிவருகின்றன. இரு கட்சிகளுமே தீவிரமாக பிரசாரத் திட்டங்களை முன்னெடுக்கும் வழிகளைத் தீர்மானித்துவருகின்றன. அந்த வகையில், இரு கட்சிகளும் சமூக வலைதளங்கள், தேர்தலில் முக்கியப் பங்காற்றும் என்பதை நம்புகின்றன.

Sponsored


இந்த நிலையில், மத்தியப்பிரதேச காங்கிரஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், கண்டிப்பாக ஃபேஸ்புக்கில் 15,000 லைக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். ட்விட்டரில் 5,000 ஃபாலோயர்ஸைக் கொண்டிருக்க வேண்டும். பூத் நிர்வாகிகளுடன் வாட்ஸ்அப்  குரூப்பில் தொடர்பில் இருக்க வேண்டும். அவர்கள், மத்தியப் பிரதேச காங்கிரஸ் வெளியிடும் அறிவிப்புகளை லைக் செய்து, ஷேர் செய்ய வேண்டும். அதைப் பின்தொடர்பவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



Trending Articles

Sponsored