`பண மதிப்பிழப்பு காரணம் அல்ல; ரகுராம் ராஜனே காரணம்' - நிதி ஆயோக் தலைவர் ராஜீவ் குமார்Sponsored``பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் வளர்ச்சி சீர்குலையவில்லை; ரகுராம் ராஜன் எடுத்த நடவடிக்கையால்தான் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டது'' என நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் குற்றம் சுமத்தியுள்ளார். 

இது தொடர்பாகத் தனியார் ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், `மோடி தலைமையிலான மத்திய அரசு, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டதால்தான் பொருளாதாரம் சரிவைக் கண்டுள்ளது என்று கூறுவது பொய்யான தகவல். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால்தான் பொருளாதாரம் சரிந்துள்ளதாக ப.சிதம்பரம், மன்மோகன் சிங் உள்ளிட்டோர் தெரிவித்து வருகின்றனர். இது முற்றிலும் தவறு. பிந்தைய பணமதிப்பிழப்பு காலத்தில், இந்திய பொருளாதாரம் இறங்கியது இதற்குக் காரணம். கடந்த காலாண்டில் ஏற்பட்ட சரிவே தவிர பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இல்லை. 2015 - 2016-ல் பொருளாதார வளர்ச்சி 9.2 சதவிகிதமாக அதிகரித்தது. 

Sponsored


நாட்டின் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டதற்கு பணமதிப்பிழப்பு நேரடி தொடர்பு இருக்கிறது என்பதை ஆதாரத்துடன் சமர்ப்பிக்க முடியுமா. நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுப் பொறுப்பேற்றபோது, ரூ.4 லட்சத்தில் இருந்த வாராக்கடன் ரூ.10.5 லட்சமாக அதிகரித்தது. இதற்குக் காரணம், செயல்படாமல் இருக்கும் சொத்துகளை அடையாளம் காண புதிய வழிமுறைகளை ரகுராம் ராஜன் உருவாக்கினார். இதனால், வங்கித்துறைகள் தொழில்துறைகளுக்கு கடன் வழங்குவதை நிறுத்திவிட்டது. இதுவே, நாட்டின் வளர்ச்சி பாதிக்க காரணமாக அமைந்தது' எனக் கூறியுள்ளார். 

Sponsored
Trending Articles

Sponsored