இது ஐ.பி.ஓ சீஸன்... 11 நிறுவனங்கள் பங்கு வெளியிட `செபி'-யிடம் விண்ணப்பம்!Sponsoredநடப்பாண்டில், அதிக அளவில் நிறுவனங்கள் பொதுமக்களுக்கு  பங்குகளை  வெளியிட்டு மூலதனச் சந்தையில் களமிறங்கிவருகின்றன. இதுவரை 21  நிறுவனங்கள் பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு (IPO)  ரூ.28,000 கோடி திரட்டியுள்ளன. இந்த நிலையில்,  கடந்த ஆகஸ்ட் மாதத்தில்  11  நிறுவனங்கள் பங்குகளை வெளியிடவேண்டி செபி-யிடம் விண்ணப்பித்துள்ளன. 

எஜிஎஸ் டிரான்ஸ் ஆக்ட் டெக்னாலாஜீஸ்( AGS Transact Technologies), ஏ.எஸ்.கே. இன்வெஸ்மென்ட்  மேனேஜர்ஸ் ( ASK Investment Managers) உள்ளிட்ட 11 நிறுவனங்கள், அவற்றின் விரிவாக்கத் திட்டங்கள் மற்றும் செயல்பாட்டு மூலதனத்தை அதிகரிக்கத்  தேவையான ரூ.7,000 கோடி நிதியை ஐ.பி.ஓ  வாயிலாகத் திரட்ட  பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு அமைப்பான செபி-யிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Sponsored


ஸ்டட்ஸ் ஆக்சசரீஸ் (Studds Accessories) , சென்கோ கோல்டு ( Senco Gold), ஹர்சா இன்ஜினீயர்ஸ் (Harsha Engineers),  மிஸர்ஸ் பெக்ட்டார்ஸ் ஃபுட் ஸ்பெஷாலிட்டீஸ் (Mrs Bectors Food Specialities), சன்சேரா இன்ஜினீயரிங் (Sansera Engineering), என்டெய்ரிஹிலண்ட் (NDairyihilent), டோட்லா டெய்ரி (Dodla Dairy), ஷியாம் மெட்டாலிக்ஸ் எனர்ஜி (Shyam Metalics  and Energy), ஜெல்மேக்  டிசைன் அண்ட் டெக் (Xelpmoc Design and Tech) ஆகிய நிறுவனங்கள், சந்தைக் கண்காணிப்பு அமைப்பான செபி-யிடம் பங்கு வெளியிடக் கோரி, முதல் கட்டமாக  ஆவணங்களைத் தாக்கல்செய்துள்ளது. இந்த அனைத்து நிறுவனங்களும் இணைந்து, ஐ.பி.ஓ மூலம் ரூ.7,200  கோடி அளவுக்கு நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாக, சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

Sponsored


இந்தப் பங்கு நிறுவனங்களில், எத்தனை நிறுவனங்களுக்கு அனுமதி கிடைக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். Trending Articles

Sponsored