மும்பையில் ஓடும் ரயிலில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட இளம்பெண் #viralvideoSponsoredமும்பையில் ஓடும் ரயிலில் பெண் ஒருவர், உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும் வகையில் ரயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் வீடியோ, ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.  

கடந்த 31-ம் தேதி இரவு 11.30 மணியளவில், ரியே ரோடு ஸ்டேஷனில் இருந்து காட்டன் கிரீன் ஸ்டேஷனுக்கு ரயில் சென்றுள்ளது. இதில், பயணித்த பெண், ரயிலின் கைப்பிடிக் கம்பியைப் பிடித்துத் தொங்கியபடி பயணித்திருக்கிறார். அதோடு, ரயில் பாதைகளில் உள்ள கம்பங்களைத் தொட்டவாறு விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறார். இதோடு நிற்காமல், ரயில் நிற்கும் முன்பே நடைமேடையில் குதித்து இறங்கிச்சென்றுள்ளார். ஓடும் ரயிலில் அப்பெண் செய்த அத்தனை செயல்களையும் சக பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். தற்போது, இந்த வீடியோதான் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகிவருகிறது. 

Sponsored


இந்த விவகாரம் தொடர்பாக ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், `அந்தப் பெண்ணை அடையாளம் காணமுடியவில்லை. ரியே ரோடு ஸ்டேஷன் மற்றும் காட்டன் கிரீன் ஸ்டேஷனில் பதிவாகியுள்ள சிசிடிவி கேமரா பதிவை வைத்து அப்பெண்ணை அடையாளம் காண நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்' என்றார். 

Sponsored


Video Credit -@MumbaiMirrorTrending Articles

Sponsored