94 எம்.பி-க்கள் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை - ஆர்.டி.ஐ தகவல்Sponsoredநாடாளுமன்றத்தில் 94 எம்.பி-க்கள் இதுவரை தங்களின் சொத்துக் கணக்கை தாக்கல் செய்யவில்லை என ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்துள்ளது. 

கடந்த 2014-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்கும் அனைவரும் அவர்கள் பதவியேற்ற 90 நாள்களுக்குள் தங்களின் சொத்து மதிப்பை வெளியிட வேண்டும் என்பது கட்டாயமாகும். 

Sponsored


சமூக ஆர்வலரான ரச்சனா கல்ரா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தற்போது பதவியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் எத்தனை பேர் தங்களின் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்துள்ளனர் எனக் கேட்டுள்ளார். இதற்கு மக்களவை செயலர் பதிலளித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள பதிலில், ‘ 2014-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்குப் பிறகு தற்போதுள்ள எம்.பி-க்களில் 94 பேர் இன்னும் தங்களின் சொத்துக் கணக்கை தாக்கல் செய்யவில்லை அவர்களில் 4 எம்.பி-க்கள் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டவர்கள். சொத்து மதிப்பு தாக்கல் செய்யாத மொத்த எம்.பி-க்களில் 64 பேர் மக்களவையையும் 29 பேர் மாநிலங்களவையையும் சேர்ந்தவர்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.

Sponsored
Trending Articles

Sponsored