திருடுபோன நிஜாமின் தங்க டிஃபன் பாக்ஸை தேடும் 10 தனிப்படைகள்!Sponsoredதெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நிஜாம் அருங்காட்சியம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு கலை மற்றும் பாரம்பரியம் மிக்க பொருள்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இங்கு ஹைதராபாத்தை ஆண்ட நிஜாம் மன்னர்கள் பயன்படுத்திய தங்கம் மற்றும் வைரத்திலான சுமார் 450 பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 

வைரக் கற்கள் பதித்த தங்க டிஃபன் பாக்ஸ் ஹைதராபாத்தின் ஏழாவது நிஜாம் மீர் ஓஸ்மான் அலி கான் என்பவருக்கு 1937-ம் ஆண்டு அன்பளிப்பாக வந்தது. அதுவும் அதோடு கோப்பை வைக்கும் சிறு தட்டு, தேநீர்க் கோப்பை மற்றும் ஒரு ஸ்பூன் ஆகியவை ஹைதராபாத் நிஜாம் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.  இவற்றின் மதிப்பு 250 கோடி முதல் 500 கோடி வரை இருக்கலாமென்று சொல்லப்படுகிறது.

Sponsored


ஹைதராபாத் நிஜாம் அருங்காட்சியகத்தின் ட்விட்டர் பக்கத்தில் இன்று காலை ஒரு பதிவிட்டுள்ளனர். அந்தப் பதிவின்படி மேற்கூறிய தங்கத்தாலான பொருள்கள் திருடப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்கள். வெண்டிலேட்டர் வழியாகக் கடந்த ஞாயிற்றுக் கிழமை உள்ளே நுழைந்த திருடர்கள் வைரம் பதித்த தங்க டிஃபன் பாக்ஸ் மற்றும் தங்கத் தேநீர் கோப்பை அதனுடைய ஸ்பூன் போன்றவற்றைத் திருடிச் சென்றுள்ளனர். இதை விசாரிக்க ஹைதராபாத் காவல்துறை 10 தனிப்படைகளை அமைத்துள்ளது. திருடப்பட்ட டிஃபன் பாக்ஸின் கனம் மட்டுமே 2 கிலோ. சர்வதேசக் கள்ளச்சந்தையில் இந்தப் பொருள்கள் ரூ.50 கோடி வரை விலைபோகலாமென்று நம்பப்படுகிறது.

Sponsored


இதுதொடர்பாக பேசிய காவல்துறை அதிகாரிகள், “அருங்காட்சியகத்தில் உள்ள சிசிடிவி கேமரா இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. மரத்தாலான வெண்டிலர்கள் மூலம் கொள்ளையன் உள்ளே வந்திருக்கலாம். ஏனெனில் சிசிடிவி கேமராக்கள் அந்த வெண்டிலேட்டர் இருந்த பகுதியில் பொருத்தியிருக்கவில்லை. இதனைப்பயன்படுத்தி கொள்ளையன் உள்ளே வந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. சுமார் 20 அடி உயரம் உள்ள சுவரில் கயிற்றின் உதவியுடன் உள்ளே வந்து லாக்கரை உடைத்து பொருட்களை கொள்ளையடித்து விட்டு சென்றிருக்கலாம். அங்கிருந்த சிசிடிவி கேமராவில் கொள்ளை நடந்த சம்பவம் பதிவாகியுள்ளது. ஆனால் அவரது முகம் சரியாக பதிவாகவில்லை. இங்கிருப்பவர்கள் தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டி இருக்க வேண்டும் ஒரு வேளை முன்னாள் ஊழியராக கூட இருக்கலாம். இதுதொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.Trending Articles

Sponsored