காவலரை அடித்துக் கொன்ற மர்மநபர்கள் - கண்டுகொள்ளாத பொதுமக்கள்!Sponsoredஓய்வு பெற்ற காவலரை மர்மநபர்கள் அடித்துக் கொன்றதை அருகில் இருந்த பொதுமக்கள் தட்டிக்கேட்காமல் வேடிக்கை பார்த்த அவலம் அலகாபாத்தில் நடந்துள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் 70 வயதான ஓய்வுபெற்ற காவலர் ஒருவரை மர்மநபர்கள் சரமாரியாக தாக்கும் சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது. இதைப் பார்க்கும் அனைவருக்கும் இதயம் கனக்கும். வீடியோ தொடங்கும்போது ஒரு தெருவில் காவலர் அப்துல் சமாத் கான் மிதிசக்கர வண்டியில் வந்துகொண்டிருக்கிறார். அவரை வழிமறித்த சில மர்ம நபர்கள் கீழே தள்ளிவிட்டு ஒரு தடியால் பலமாகத் தாக்குகின்றனர். அதைத் தடுக்க முயன்று காவலர் எழுந்து நிற்க முயற்சி செய்கிறார் அதற்குள் அவர் மீது சரமாரியாக பத்து அடி விழுகிறது. இதில் பலத்த காயமடைந்த காவலர் அருகில் இருந்த சுவரில் சாய்ந்து அமர்ந்துவிடுகிறார். அப்போதும் விடாத அந்த மர்மநபர்கள் தொடர்ந்து தாக்குகின்றனர். பிறகு அவர்கள் அந்த இடத்தைவிட்டு ஓட்டம் பிடிக்கின்றனர். இவ்வாறு அந்த வீடியோ பதிவாகியுள்ளது. இதில், கொடுமை என்னவென்றால் காவலர் தாக்கப்படுவதை அருகில் இருந்த பொதுமக்கள் பலரும் பார்த்துவிட்டு மிகவும் எளிதாக அந்த இடத்தைக் கடந்து செல்கின்றனர். ஒருவரும் மர்மநபர்களைத் தடுக்கவில்லை, அந்தக் காவலரைக் காப்பாற்ற நினைக்கவில்லை என்பதுதான் மிகவும் வேதனைக்குரிய செய்தி. 

Sponsored


ரத்த வெள்ளத்தில் கிடந்த காவலர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அழைத்து செல்லப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில் அவர் உயிர் பிரிந்துவிட்டது. இது குறித்த விசாரணையில், சொத்துப் பிரச்னை காரணமாக காவலரின் உறவினர்களே மர்மநபர்களை வைத்து அவரைத் தாக்கியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், காவலரை தாக்கியவர்கள் சிசிடிவி கேமிராவின் உதவியுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முன்னதாக அவர் மீது 10 கிரிமினல் வழக்கு உள்ளதாக அலகாபாத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, தாக்கியவர்கள் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Sponsored


எச்சரிக்கை : பலவீனமானவர்கள் கீழே உள்ள வீடியோவை பார்க்க வேண்டாம்Trending Articles

Sponsored