வெளிநாட்டுப் பயணத்தின்போது மோடியுடன் பயணித்தவர்கள் யார் யார்? - பதிலளிக்க தகவல் ஆணையம் உத்தரவு!



'பிரதமர் வெளிநாடு பயணம் மேற்கொள்ளும்போது, பாதுகாப்பு அதிகாரிகள் தவிர்த்து அவருடன் பயணம்செய்யும் தனி நபர்களின் விவரத்தை அளிக்க வேண்டும்' என்று மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

Sponsored


'பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணத்தின்போது ஏற்பட்ட செலவுகள்குறித்த விவரங்களை அளிக்க வேண்டும்' என்று கராபி தாஸ் என்பவர் கடந்த அக்டோபர் மாதம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரியிருந்தார். தகவல் அளிப்பதற்காக வெளியுறவுத்துறை அமைச்சகம் 224 ரூபாய் செலுத்த வேண்டும் என்று கோரியிருந்தது. அந்தப் பணத்தை கராபி தாஸ் செலுத்திவிட்டார். இந்த நிலையில்,  அவர் கோரியிருந்த முழுமையான தகவல்கள் அளிக்கப்படவில்லையென்று தகவல் ஆணையத்தில் அவர் முறையிட்டார்.

Sponsored


அவரது சார்பாக, சமூக ஆர்வலர் சுபாஷ் அகர்வால் ஆஜரானார். அந்த விசாரணையின்போது, வெளியுறவுத்துறை அமைச்சகம், 'பயணத் தேதியும் நாடுகளும் தவிர்த்து, வேறு தகவல்கள் இல்லை' என்று தெரிவித்தது. அதையடுத்து, மத்திய தகவல் ஆணையர் ஆர்.கே.மாதுர், 'வெளிநாட்டுப் பயணங்களின்போது, பிரதமருடன் (பாதுகாப்பு அதிகாரிகள் தவிர்த்து) பயணித்த தனிநபர்கள் குறித்த விவரங்களை அளிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார். 

Sponsored




Trending Articles

Sponsored