`என் மீது பாசம் இல்லை; 2வது மனைவிமீது தான் கணவர் பாசம்'- சிறுமியைக் கொன்ற பெண் அதிர்ச்சி வாக்குமூலம்Sponsoredஜம்மு- ஜாஷ்மீர் மாநிலத்தில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உரி பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது 9 வயது மகள் காணாமல் போனதாக போனியர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தன் மகளை யாராவது கடத்திச் சென்றிருக்கக்  கூடும் என அந்தப் புகாரில் அவர் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியைத் தேடி வந்தனர். காவல்துறையின் விசாரணையில் புகார் அளித்த நபருக்கு இரண்டு மனைவிகள் இருப்பதும் காணாமல் போன சிறுமி இரண்டாவது மனைவிக்கும் அந்த நபருக்கு பிறந்த குழந்தை என்பதும் தெரியவந்தது. முதல் மனைவி அதே கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது இரண்டாவது மனைவி ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற தகவலை காவல்துறையினர் சேகரித்தனர்.

Sponsored


இந்த நிலையில், கடந்த 2-ம் தேதி காணாமல் போன சிறுமி சடலமாக காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டார். கொடூரமான முறையில் சிறுமி கொலை செய்யப்பட்டிருந்தார். அவரது உடலை ஆசிட் ஊற்றி சிதைத்துள்ளனர். சிறுமியின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். குடும்ப உறுப்பினர்களிடம் காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர். இதில் எதிர்பாராத அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது.

அவரின் முதல் மனைவி சிறுமியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தன் 14 வயது மகன் மற்றும் சிலர் இதில் உடந்தை என்பதையும் அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக காவல்துறையினரிடம் அந்தப்பெண் அளித்த வாக்குமூலத்தில், ``தன் கணவர் இரண்டாவது மனைவியுடனும் அவரது குழந்தையிடமும் அதிக நெருக்கமாக இருந்ததாகவும், மற்ற குழந்தைகளைவிட அந்தச் சிறுமி மீது அதிக பாசம் வைத்திருந்ததாகத் தெரிவித்தார். அவர்களுடனே அதிக நேரம் செலவிட்டார். இது தனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. இதனால் சிறுமியைக் கொலை செய்வது என முடிவு செய்தேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும், எவ்வாறு கொலை செய்தனர் என்ற தகவலை தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.

Sponsored


இதுதொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், ``அந்தப் பெண்ணிடம் நடத்திய விசாரணையில் இரண்டாவது மனைவி மற்றும் அவர்களது குழந்தை மீது கணவருக்கு அதிக பாசம் இருந்தது இவருக்குப் பிடிக்கவில்லை. இதனால் சிறுமியை கொலை செய்ய முடிவு செய்து காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். கொலை செய்வதற்கு முன்பு தனது 14 வயது மகனை பாலியல் வன்கொடுமை செய்ய கூறியுள்ளார். மேலும், இருவர் அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து முதல் மனைவி மற்றும் மற்றொரு நபர் அங்கு சென்றுள்ளார். சிறுமியின் தலையில் கோடாரியைக் கொண்டு பலமாக தாக்கி கொலை செய்துள்ளனர். சிறுமியின் உடலில் ஆசிட் ஊற்றியுள்ளனர். பின்னர் சிறுமியின் உடலைக் காட்டுப்பகுதியில் வீசிவிட்டு, கொலைக்குப் பயன்படுத்திய கோடாரியை அப்பகுதியில் மறைத்துவிட்டுச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேர் சிறுவர்கள். இதுதொடர்பாக 5 பேரை கைது செய்துள்ளோம்'' என்றனர்.Trending Articles

Sponsored