ரூபாயின் சரிவு, வர்த்தகப் பூசல் காரணமாக மீண்டும் சரிந்தது சந்தை! 05-09-2018Sponsoredஇன்று வர்த்தகம் துவங்கிய பின், ஒரு சில நிமிடங்கள் மட்டும் பாசிட்டிவ் திசையில் பயணித்து, இந்திய பங்குச் சந்தை வலுவிழந்து, ஒரு கட்டத்தில் பெரிய சரிவைக் கண்டது. பின்னர், சற்று சுதாரித்து நஷ்டத்தை ஓரளவுக் குறைத்துக்கொண்டாலும், இறுதியில் தொடர்ந்து ஆறாவது நாளாக பலவீனமான நிலையிலேயே முடிவுற்றது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், இன்றைய தினத்தில் உச்சத்திலிருந்து சுமார் 500 புள்ளிகள் சரிந்து, 37,774.42 என்ற நிலைக்கு வந்து, பின்னர் 139.61 புள்ளிகள். அதாவது 0.37 சதவிகிதம் நஷ்டத்துடன் 38,018.31 என முடிந்தது.

Sponsored


தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி, ஒரு கட்டத்தில் 125 புள்ளிகளுக்கு மேல் சரிந்தாலும், இறுதியில் 43.35 புள்ளிகள். அதாவது 0.36 சதவிகித நஷ்டத்துடன் 11,476.95-ல் முடிவுற்றது.

Sponsored


டெலிகாம், எஃப்.எம்.சி. ஜி, நுகர்வோர் சாதனங்கள் மற்றும் கேப்பிட்டல் கூட்ஸ் துறைகளைச் சேர்ந்த பங்குகள் பெரும்பாலும் சரிந்தன. மருத்துவம் மற்றும் உலோகத் துறை பங்குகள் சற்று முன்னேறின. ஏனைய துறைகளின் பங்குகள் சில லாபத்துடனும், சில நஷ்டத்துடனும் முடிந்தன.

இந்த வார இறுதியிலிருந்து, சீனாவிலிருந்து இறக்குமதியாகும் 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருள்கள் மீதான 25 சதவிகித வரி விதிப்பை அமெரிக்கா அமல் படுத்தக்கூடிய வாய்ப்புள்ள நிலையில், வர்த்தக யுத்தம் பற்றிய கவலை அதிகரித்திருப்பதால், ஆசிய சந்தைகளில் இன்று மந்தமான நிலையே இருந்தது. 

இதே காரணத்தினாலும், வளர்ந்து வரும் நாடுகளின் கரன்சிகள் தொடர்ந்து சரிந்துவருவதாலும், ஐரோப்பிய சந்தைகளிலும் பங்குகள் சரிந்தன. இந்நிலையில், சென்ற வாரம் எந்தவித முன்னேற்றமும் இல்லாது முடிந்த அமெரிக்க - கனடா பேச்சு வார்த்தை, இன்று மீண்டும் துவங்கவிருக்கிறது. 

அமெரிக்க டாலருக்கெதிராக இந்திய ரூபாய் 71.97 என்ற புதிய லோ-வை எட்டியதும், சந்தையின் மந்த நிலைக்கு ஒரு முக்கியக் காரணம். கச்சா எண்ணெய் விலை மற்றும் சற்று குறையாமல் இருந்திருக்குமானால், சந்தையின் இன்றைய சரிவு இன்னும் பெரிதாக இருந்திருக்கும்.

இன்று விலை சரிந்த பங்குகள் :

பார்தி ஏர்டெல் 4.5%
ஹிந்துஸ்தான் யூனிலீவர் 2.5%
டைட்டன் 2%
ஜீ டெலி 2%
கோடாக் மஹிந்திரா பேங்க் 1.7%
லூப்பின் 1.55%
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் 13.3%
என்ஜினீயர்ஸ் இந்தியா 5.8%
மெர்க் 5%

விலை அதிகரித்த பங்குகள் :

யெஸ் பேங்க் 2.9%
ஹிண்டால்கோ 2.4%
வேதாந்தா 2.3%
அதானி போர்ட்ஸ் 1.5%
விப்ரோ 1.4%
சன் ஃபார்மா 1.4%
டாடா மோட்டார்ஸ் 1.35%
கேப்லின் பாய்ன்ட் 9.5%
முத்தூட் ஃபைனான்ஸ் 9.4%
அலெம்பிக் ஃபார்மா 5.7%
AIA இன்ஜினீயரிங் 5.1%
பையோகான் 5%

இன்று மும்பை பங்குச் சந்தையில் 1041 பங்குகள் மட்டுமே லாபத்துடன் முடிந்தன. 1719 பங்குகள் விலை சரிந்தும், 170 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.Trending Articles

Sponsored