`நானும் அர்பன் நக்சல் தான்' - கழுத்தில் பதாகையுடன் கூட்டத்துக்கு வந்த நடிகர் கிரிஷ் கர்னாட்!Sponsored`கெளரி லங்கேஷ் பத்திரிக்கே' வார இதழின் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான கெளரி லங்கேஷ் கடந்த வருடம் செப்டம்பர் 5-ம் தேதி தனது வீட்டு வாசலில் சுட்டுக்கொல்லப்பட்டார். வலதுசாரி எதிர்ப்பு நிலைப்பாடு, இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்ததை அடுத்து அவர் கொல்லப்பட்டார். இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தக் கொலை விவகாரத்தில் நீண்ட நாள்களுக்குப் பிறகு தான் குற்றவாளி கைது செய்யப்பட்டார். 

நேற்றுடன் கெளரி லங்கேஷ் இறந்தது ஓராண்டு முடிந்துள்ளதை அடுத்து பெங்களூரில் அவருக்கு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் ஜிக்னேஷ் மேவானி, நடிகர் பிரகாஷ் ராஜ், ஜே.என்.யு மாணவர் தலைவர் உமர் காலித் ஆகியோர் பங்கேற்றனர். இதேபோல் மூத்த பத்திரிகையாளர்கள் பலரும் கலந்துகொண்டு கெளரி லங்கேஷுக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது இந்தக் கூட்டத்துக்கு வந்த நடிகரும், மூத்த எழுத்தாளருமான கிரிஷ் கர்னாட் (#metoourbannaxal) `நானும் அர்பன் நக்சல் தான்' என்று எழுதப்பட்ட பெரிய பதாகையைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு வந்தார். அவரைப் போலவே, இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த பலரும் (#metoourbannaxal) `நானும் அர்பன் நக்சல் தான்' என்ற பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். 

Sponsored


சமீபத்தில் 'பிரதமர் மோடியைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியவர்கள்' எனக் கூறி இடதுசாரி கவிஞர் வரவர ராவ், வழக்கறிஞர் அருண் பெரேரா, வெர்னோன் கொன்சால்வேஸ், டெல்லி சட்டப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுதா பரத்வாஜ், அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான கௌதம் நவ்லகா ஆகியோர் கைது செய்யப்பட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை அர்பன் நக்சல் எனக் கூறி போலீஸ் கைது செய்தது. இதை எதிர்க்கும் வகையிலும், தொடர்ந்து பத்திரிகையாளர், சமூக செயற்பட்டார்கள் ஒடுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் அவர்கள் இந்தப் பதாகையை அணிந்து வந்திருந்தனர்.

Sponsored
Trending Articles

Sponsored