`மேகதாது அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை' - கர்நாடக அமைச்சர் சர்ச்சைப் பேச்சு!Sponsoredமேகதாது அணை கட்ட தமிழகத்திடம் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை எனக் கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணைக் கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வளத்துறையிடம் தாக்கல் செய்துள்ள அம்மாநில அரசு, புதிய அணை கட்ட ஒப்புதல் வழங்கும்படி கோரியுள்ளது. கர்நாடகத்தின் இக்கோரிக்கையை ஆய்வு செய்யப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அணையைக் கட்ட அனுமதி அளிக்கக் கூடாது என முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள கர்நாடக நீர் பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், ``மேகதாது அணை கட்ட தமிழகத்திடம் ஒப்புதல் பெற வேண்டிய தேவையில்லை. காவிரி தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. இதைத் தடுக்கவே மேகதாது அணை கட்டவுள்ளோம். இதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வளத்துறையிடம் சமர்ப்பித்துள்ளோம். எங்களின் முடிவு குறித்து நீர்வளத்துறையே இறுதி முடிவு செய்ய வேண்டும். 

Sponsored


இதில் தமிழகத்திடம் இருந்து ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை. அண்டை மாநிலத்துடன் சண்டைபோட நாங்கள் விரும்பவில்லை. திட்டத்தை உருவாக்கவே  விரும்புகிறோம். அவர்களுடன் நட்புறவையே விரும்புகிறோம். அவர்களின் கவலையை தீர்க்கத் தயாராக உள்ளோம். மேகதாது அணை கட்டினாலும் தமிழகத்துக்கான நீர் அளவு குறைக்கப்படாது. இத்திட்டத்துக்காக அவர்களிடம் பேசுவதற்கு ரெடியாக இருக்கிறோம். எங்கள் முதல்வர் குமாரசாமி தமிழக முதல்வரைத் தொடர்புகொண்டுள்ளார். பாசனத்துறை அமைச்சர் என்ற முறையில் நானும் தமிழக நீர்வளத்துறை அமைச்சரை அழைத்துள்ளேன். இது தொடர்பாக பேசுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

Sponsored
Trending Articles

Sponsored