ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்குமா? இன்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்புSponsoredஓரினச் சேர்க்கையை அனுமதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. 

கோப்புப்படம்

Sponsored


ஓரினச் சேர்க்கையை அங்கீகரிக்க வேண்டும் என்றும் அதை குற்றச் செயல்களின் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்றும் இந்தியாவில் பல ஆண்டுகளாக கோரிக்கை எழுந்துவருகிறது. ஓரினச் சேர்க்கை அங்கீகரிக்க வேண்டும் என்று எல்.ஜி.பி.டி குழுவைச் சேர்ந்த ஐந்து பேர் 2016-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். வழக்கைத் தொடர்ந்த ஐவரும் சமூக அந்தஸ்தில் உயரிடத்திலுள்ளவர்கள். அவர்கள் குறிப்பிட்ட மனுவில், 'சட்டத்தின் முன்னால், மதம், இனம், மொழி, பாலினம், பிறப்பின் அடிப்படையில் பேதம் இருக்கக் கூடாது என்று விவரிக்கிறது. ஆனால், சட்டப் பிரிவு 377, அரசியல் சாசனத்தால் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.

Sponsored


ஓரினச் சேர்க்கையாளர்கள் அச்சத்துடனேயே வாழ வேண்டிய சூழல் உள்ளது. நிறைய மிரட்டல்களை சந்திக்கவேண்டி உள்ளது' என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், ஏ.எம்.கான்வில்கார், சந்திராசவுத், இந்து மல்ஹோத்ரா ஆகிய ஐந்து பேர் அடங்கிய அமர்வில் கீழ் விசாரணை நடைபெற்றது. இந்திய அரசியல் சட்டம் 377-வது பிரிவு ஓரினச் சேர்க்கையை தடை செய்கிறது. அந்தப் பிரிவை நீக்க வலியுறுத்திதான் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. Trending Articles

Sponsored