‘பாக். தீவிரவாதத்தை நிறுத்தினால் நானும் நீரஜ் சோப்ரா தான்’ - ராணுவத் தளபதி பேச்சு!Sponsored``பாகிஸ்தான் மட்டும் தீவிரவாதத்தை நிறுத்தினால், நானும் நீரஜ் சோப்ரா போலத்தான் நடந்துகொள்வேன்'' என இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். 

சமீபத்தில், இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எரிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். வெள்ளி மற்றும் வெண்கலம் முறையே சீனாவின் லியூ மற்றும் பாகிஸ்தானின் அர்சத் நதீம் வென்றனர். அன்றைய தினம் பரிசளிப்பு விழாவில், இந்திய வீரர் நீரஜ், பாகிஸ்தான் வீரர் நதீமிடம் கைகுலுக்கி நட்பு பாராட்டினார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. 

Sponsored


இந்நிலையில், நேற்று ராணுவம் சார்பாக பதக்கம் வென்றவர்களை சிறப்பிக்கும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. அதில் பேசிய ராணுவத் தளபதி பிபின் ராவத், “ பாகிஸ்தான் தீவிரவாதத்தை நிறுத்த வேண்டும். ஒருவேளை அவர்கள் நிறுத்தினால், நானும் நீரஜ் சோப்ரா தான். அவரைப் போலவே நானும் நடந்துகொள்வேன். எல்லைப் பகுதியில் உள்ள உள்ளூர் இளைஞர்கள் கையில் ஆயுதம் ஏந்தி தீவிரவாதத்தில் இறங்கியுள்ளனர். அவர்களின் செயல் தவறு. இளைஞர்களின் இந்தச் செயல் தொடர்ந்தால், பாதுகாப்புப் படையினரின் தாக்குதலும் தொடரும். இளைஞர்களின் இந்தச் செயல் மிகவும் தவறானது. இதை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று பேசியுள்ளார்.

Sponsored
Trending Articles

Sponsored