`தன் பாலின உறவு மனநலக் கோளாறு அல்ல!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்Sponsoredதன் பாலின உறவை அங்கீகரிப்பதா இல்லை தண்டனைக்குரிய குற்றம் எனக் கருதுவதா என்ற விவாதம் நீண்ட நாள்களாக நடந்து வருகிறது. இந்த விவாதத்துக்கு உச்ச நீதிமன்றம் தற்போது முற்றுப்புள்ளி வைத்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

இந்தத் தண்டனைச் சட்டம் பிரிவு 377-ல் தன் பாலின உறவில் ஈடுபடுவது தண்டனைக்கு உரியது. இந்தச் செயலில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவர் எனக் கூறப்பட்டிருந்தது. இந்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த 1994-ல் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2009-ல், `தன் பாலின உறவு குற்றமில்லை' எனத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

Sponsored


வழக்கை விசாரித்த நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கடந்த 2013-ல் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் தன் பாலின உறவு ஆதரவாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். முதலில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் விசாரித்தனர். அதன் பின்னர், ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது. இந்த நிலையில், தன் பாலின உறவு குற்றம் எனச் சொல்லும் 377 சட்ட பிரிவை ரத்து செய்து வரலாற்று முக்கியத்துவமான தீர்ப்பை நீதிபதிகள் இன்று வழங்கினர்

Sponsored


நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் முக்கியமாகக் குறிப்பிட்ட சில கருத்துகள் இதோ...

  • பிரிவு 377 என்பது, ஓரினச் சேர்க்கையாளர்கள் சமூகத்தில் உறுப்பினர்களைத் தொந்தரவு செய்யும் ஓர் ஆயுதமாக இருந்தது. இதன் விளைவாகப் பாகுபாடு காண்பிக்கப்பட்டது. 
  • பிரிவு 377 தன்னிச்சையானது. சமூகத்தில் மற்றவர்களைப் போலவே தன் பாலின உறவு ஆதரவாளர்களுக்கும் உரிமையுள்ளது. பெரும்பான்மை மக்களின் கருத்துகள் மற்றும் அறநெறிகள் அரசியலமைப்பு உரிமைகளுக்குக் கட்டளையிட முடியாது. 
  • யாரும் தங்கள் தனித்துவத்திலிருந்து தப்பிக்க முடியாது. சமூகமும் தனித்துவத்துக்கு சிறந்ததாகவே உள்ளது. தற்போதைய வழக்கில், எங்களுடைய விவாதங்கள் பலநிறங்களில் உள்ளன. 
  • ஒரு தனிநபரின் சுதந்திரமானது மிக முக்கியமானது. ஆண் அல்லது பெண் இரு பாலினத்தவரும் அவர்களது சுதந்திரத்தை மற்றவர்களுக்காகக் கொடுக்க முடியாது. 
  • தன் பாலின உறவு என்பது மனநலக் கோளாறு அல்ல. 
     Trending Articles

Sponsored